தல்மிசு அகமது

இந்திய ராஜதந்திரி

தல்மிசு அகமது ( Talmiz Ahmad; பிறப்பு; 1951 ) ஓர் ஒரு இந்திய இராஜதந்திரியாவார். [1] 1974 இல் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்தார். மேலும் சவுதி அரேபியாவிலும் , ஓமானிலும் (2003-04), ஐக்கிய அரபு அமீரகத்திலும் (2000-03; 2010-11) இந்தியத் தூதராகப் பணியாற்றினார். [2] 2004-06ல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கான கூடுதல் செயலாளராக இருந்தார். 2006-07ல், புது தில்லியில் உள்ள இந்திய உலக விவகார அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்தார். ஜூலை 2011 இல், இந்திய-சவுதி உறவுகளை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சவூதி அரசாங்கம் இவருக்கு மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசு பதக்கம் வழங்கியது. வெளிநாட்டுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, துபாயில் உள்ள எரிசக்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தல்மிசு அகமது
تلمیذ احمد
India Ambassador to Saudi Arabia
பதவியில்
2000–2003
இந்தியாவின் Ambassador to Oman
பதவியில்
2003–2004
Indian Ambassador to UAE
பதவியில்
2007–2010
India Ambassador to Saudi Arabia
பதவியில்
2010–2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1951
தேசியம் இந்தியா
வாழிடம்இந்தியா
வேலைஇராஜதந்திரி, எழுத்தாளர்
எழுத்துப் பணி
குறிப்பிடத்தக்க படைப்புThe Islamist Challenge in West Asia: Doctrinal and Political Competitions after the Arab Spring

இவர் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்: அரபு உலகில் சீர்திருத்தம்: வெளிப்புற தாக்கங்கள் மற்றும் பிராந்திய விவாதங்கள் (2005), போரில் ஆபிரகாமின் குழந்தைகள்: மேசியானிக் இராணுவவாதங்களின் மோதல் (2010), மேற்கு ஆசியாவில் இஸ்லாமிய சவால்: கோட்பாட்டு மற்றும் அரசியல் போட்டிகள் (வெளியிடப்பட்டது ஆகஸ்ட் 2013, அரபு வசந்தத்திற்குப் பிறகு), மற்றும் மேற்கு ஆசியா அட் வார்: அடக்குமுறை, எதிர்ப்பு மற்றும் பெரும் சக்தி விளையாட்டுகள் (2022).

இவர் மேற்கு ஆசியாவின் அரசியல், அரசியல் இசுலாம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி எழுதுகிறார் மற்றும் விரிவுரை செய்கிறார். [3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Saudi Arabia and India can work together for global peace: Talmiz Ahmad | Arab News". 7 May 2012.
  2. "Talmiz Ahmad is next Ambassador to Saudi Arabia".
  3. "Profile- Talmiz Ahmad".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்மிசு_அகமது&oldid=3820320" இலிருந்து மீள்விக்கப்பட்டது