தவலேஸ்வரம் தடுப்பணை

தவலேஸ்வரம் தடுப்பணை (ஆங்கில மொழி: Dowleswaram Barrage) என்பது வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன் கோதாவரி நதியின் கடைமடைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும். தொடக்கத்தில் பாசனத்திற்காக 1850 இல் கட்டப்பட்டிருந்தாலும் 1970 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சர் ஆர்தர் காட்டன் தடுப்பணை அல்லது கோதாவரி தடுப்பணை என்று பெயரிடப்பட்டது.[1]

சர் ஆர்தர் காட்டன் தடுப்பணை / கோதாவரி தடுப்பணை
Dowleswaram Barrage.jpg
ராஜமன்றியிலுள்ள சர் ஆர்தர் காட்டன் தடுப்பணை
நாடுஇந்தியா
அமைவிடம்ராஜமன்றி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று16°55′51″N 81°45′57″E / 16.9307594°N 81.7657988°E / 16.9307594; 81.7657988
நோக்கம்நீர்ப்பாசனம் & நீர் விநியோகம்
நிலைசெயல்பாட்டில்
கட்டத் தொடங்கியது1850
திறந்தது1970
உரிமையாளர்(கள்)ஆந்திரப் பிரதேச அரசு
அணையும் வழிகாலும்
வகைதடுப்பணை
Impoundsகோதாவரி
நீளம்3,599 மீ[1]
Website
irrigationap.cgg.gov.in/wrd/dashBoard
தவலேஸ்வரத்தில் சூரிய அஸ்தமனம்

அமைவிடம்தொகு

கோதாவரி ஆறு வங்காள விரிகுடா கடலில் கலப்பதற்கு ஐம்பது மைல் தொலைவில் இந்தத் தடுப்பணை உள்ளது. கோதாவரியின் இடதுபுரக் கரையில் ராஜமன்றி நகரம் உள்ளது.

வரலாறுதொகு

1933 காலகட்டத்தில் கடும் வறட்சியும் பஞ்சமும் கோதாவரி மாவட்டங்களில் நிலவியது. அப்போதைய மாவட்ட அதிகாரி சர் ஹென்றி மவுண்ட் பிரிட்டிஷ் அரசுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து பொறியாளர் ஆர்தர் காட்டன் கோதாவரி ஆற்றின் பகுதிகளைக் கள ஆய்வு செய்து மெட்ராஸ் ஆளுநருக்கு அனுப்பினார். பின்னர் 1846 டிசம்பர் 23 அன்று அணை கட்ட ஒப்புதல் கிடைத்தது. தாமதமின்றி, காட்டன் 1847 இல் அணை கட்டத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.[2] பத்தாயிரம் தொழிலாளர்களும், ஐநூறு தச்சர்களும், ஐநூறு கொல்லர்களும் இவ்வணை கட்டுமானத்தில் ஈடுபட்டனர். தடுப்பணையானது வெள்ள நேரத்தில் கட்டியதால் நான்கு பகுதிகளாகக் கட்டப்பட்டது.

பிற்கால 1862-67 வாக்கில், நீர்ப்பாசனம் மற்றும் படகு பயணங்களுக்காகக் கூடுதல் அணையின் உயரம் இரண்டு அடி அதிகரிக்கப்பட்டது. மீண்டும் 1897-99 இல் சிமென்ட் கான்கிரீட்டால் கட்டப்பட்டு ஒன்பது அங்குலங்கள் உயர்த்தப்பட்டது. 1936 ஆம் ஆண்டில், பத்தாயிரம் ஏக்கர் பாசன நீரை வழங்கும் மூன்று அடி கதவுகள் நிறுவப்பட்டன.

அமைப்புதொகு

கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் அணை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[3] தவலேஸ்வரம்-பிச்சுகலங்கா இடையேயான அணையின் தவலேஸ்வரம் பிரிவு 1440.5 மீ நீளமும் 70 மதகுகளும் கொண்டுள்ளன. குருவி-பாபர்லேண்டின் பேரணி பிரிவு 884.45 மீ. நீளம் கொண்டது. போபர்பாங்கோ-மதுர்லாண்டா இடையேயான மதுரூர் பிரிவு 469.6 மீ நீளமும் 23 மதகுகளும் கொண்டுள்ளது. அணையின் மொத்த நீளம் 5837 மீட்டருடன் மொத்தம் 175 மதகுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மதகும் 19.29X3.35 மீட்டர் அளவில் 27 டன் எடை கொண்டாகும்.

இந்த அணையின் கிழக்கு டெல்டாவின் கீழ் 2.76 லட்சம் ஏக்கரும், மத்திய டெல்டாவின் கீழ் 2.04 லட்சம் ஏக்கரும் மேற்கு டெல்டாவின் கீழ் 5.20 லட்சம் ஏக்கரும் பாசன நிலங்கள் உள்ளன. 1980 ஆம் ஆண்டில் அணை 15 அடி உயரமும், 3.5 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாகப் புதுப்பிக்கப்பட்டது.

நீர் அளவுதொகு

1970 ஆம் ஆண்டு தடுப்பணையின் உயரம் 10.6 மீட்டராக உயர்த்தப்பட்டது. மேலும் இதன் முழுக் கொள்ளளவு என்பது 312 கோடி கன அடியும்(3.12 டிஎம்சி), பயன்படாத கொள்ளளவு 202 கோடி கன அடியும் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 40 அடிகள் (12 m) உயரத்தில் அமைந்துள்ளது. 2019 தென்மேற்குப் பருவ மழையின் போது இந்த அணை நிறைந்து கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது.[4]

காட்டன் அருங்காட்சியகம்தொகு

பஞ்ச ஒழிப்பிற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பல அணைகளைக் கட்டியவர் காட்டன் ஆவார். அவர் நினைவாக தவலேஸ்வரம் அணைக்கு அருகே காட்டனின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வணை கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவலேஸ்வரம்_தடுப்பணை&oldid=2866428" இருந்து மீள்விக்கப்பட்டது