தவெவுனி
தவெவுனி என்னும் தீவு பிஜி நாட்டிற்கு உரியது. வானுவாலெவு, விட்டிலெவு ஆகிய தீவுகளுக்கு அடுத்த பெரிய தீவு. இது 434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த தீவு தகாந்துரோவ் மாகாணத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஏறத்தாழ 9,000 பேர் வசிக்கின்றனர்.
நாசாவின் வான்வழி படப்பிடிப்பில் தவெவுனி | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பிஜி |
ஆள்கூறுகள் | 16°48′40″S 179°57′40″E / 16.81111°S 179.96111°E |
தீவுக்கூட்டம் | வானுவாலெவு தீவுக்கூட்டம் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | கொரோ கடல் |
பரப்பளவு | 434 km2 (168 sq mi)[1] |
பரப்பளவின்படி, தரவரிசை | 3rd |
நீளம் | 42 km (26.1 mi) |
அகலம் | 10–14 km (6.2–8.7 mi) |
உயர்ந்த ஏற்றம் | 1,241 m (4,072 ft) |
உயர்ந்த புள்ளி | உலுய்கலாவு மலை |
நிர்வாகம் | |
Fiji | |
வடக்குக் கோட்டம் | கோட்டம் |
தகாதுரோவ் | மாகாணம் |
பெரிய குடியிருப்பு | வாயெவோ |
பொருளாதாரம்
தொகுஇந்த தீவில் உழவுத் தொழிலின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது. [2] கவா, வெனிலா, காப்பி ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் (1861–1865), பருத்தியை உற்பத்தி செய்து, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தனர். சில காலத்திற்கு கரும்பும் பயிரிட்டனர். செம்மறியாடு, பசு ஆகிய விலங்குகளையும் வளர்த்தனர். சுற்றுலாத் துறையினால் சிலருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
மொழிகள்
தொகுஇங்கு பிஜிய மொழியில் பேசுகின்றனர். இந்த தீவில் பேசப்படும் பிஜிய மொழியில் தோங்க மொழியின் தாக்கம் இருக்கும்.
சான்றுகள்
தொகு- ↑ Gillespie, Rosemary G.; D. A. Clague (2009). Encyclopedia of Islands. University of California Press. p. 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520256492. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2014.
{{cite book}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Cronin, Shane J.; Mark Bebbington; Chin Lai (June 2001). "A probabilistic assessment of eruption recurrence on Taveuni volcano, Fiji". Bulletin of Volcanology 63 (4): 274-288. http://link.springer.com/article/10.1007%2Fs004450100144. பார்த்த நாள்: 20 மார்ச் 2014.