தாகுபோத்து ரமேஷ்

இந்திய நடிகர்

தாகுபோத்து ரமேஷ் (Thagubothu Ramesh) என்று அழைக்கப்படும் ரமில்லா ரமேஷ், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர், சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருதைப் பெற்றுள்ளார். குடிகாரனாக பல வேடங்களில் நடித்ததால் இவருக்கு "தாகுபோத்து" (குடிகாரன்) என்ற பெயர் வந்தது.[2] மகாத்மா, அலா மொதலந்தி, பில்லா ஜமீன்தார் மற்றும் இஷ்க் போன்ற படங்களில் இவர் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்திருந்தார்.

தாகுபோத்து ரமேஷ்
2015 இல் ரமேஷ்
பிறப்புரமில்லா ரமேஷ்[1]
கோதாவரிகனி, தெலங்காணா, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுவாதி (தி. 2015)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ரமேஷ், தெலங்காணாவின் பெத்தபெல்லி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் பிறந்தார்.[1] இவருடைய தந்தை சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் ஊழியராகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தார். சிறுவயதில் அப்பா குடித்துவிட்டு அம்மாவை அடிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதால், இவர் குடிகாரக் கதாபாத்திரத்தில் எளிதாக நடிக்க முடிந்தது. வீட்டில் இவர் தனது தாயை சமாதானப்படுத்துவார். மேலும் குடிகார தந்தையைப் போல குரலை மற்றி பேசி அவரை சிரிக்க வைப்பார்.[3]

தொழில்

தொகு

ரமேஷ், இறுதியில் பலகுரலில் சிறந்து விளங்கினார். மேலும், தனது நகரத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினார். வங்காள நகைச்சுவை நடிகர் கேஷ்டோ முகர்ஜியால் ஈர்க்கப்பட்டதாகவும், அவரைப் போலவே குடிகாரன் கதாபாத்திரங்களை சித்தரிப்பதில் பிரபலமானதாகவும் கூறினார்.[1] ரமேஷ் திரையுலகிற்கு வருவதற்கு முன், 10 ஆண்டுகள் கட்டிட மேற்பார்வையாளராக பணிபுரிந்துள்ளார். பெற்றோரின் மரணம் மற்றும் சகோதரியின் திருமணத்திற்குப் பிறகு, இவர் நடிப்பைத் தொழிலாகத் தொடர முடிவு செய்தார்.[1] 2005 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள அக்கினேனி திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார்.[4]

திரைப்பட வாழ்க்கை

தொகு

2006 இல், அக்கினேனி திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு, இயக்குநர் சுகுமாரின் ஜகதம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ரமேஷ்க்கு கிடைத்தது.[1] இதுவே இவரது முதல் திரைப்படமாகும். ஜகதம் படத்திற்கு பிறகு ரமேஷ்க்கு பல வாய்ப்புகள் கிடைத்து. சுமார் 10 தெலுங்குப் படங்களில் நடித்தார். இந்த நேரத்தில், பிரபல தெலுங்கு நடிகர் உத்தேஜுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. உத்தேஜ், ரமேஷை தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சிக்கு அறிமுகப்படுத்தினார். வம்சி இவரை மகாத்மா படத்தில் குடிகாரன் வேடத்தில் நடிக்க வைத்தார்.[1] இப்படம் இவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மகாத்மாவில் குடிகாரன் கதாபாத்திரத்தை இவர் சித்தரித்ததால், பி. வி. நந்தினி ரெட்டி இயக்கிய அல மொதலந்திபடத்தில் இதே போன்ற குடிகாரன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் கௌதம் என்ற குடிகார தகவல்நுட்ப பொறியாளராக இவர் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்திலிருந்து, இவர் பொதுவாக "தாகுபோத்து ரமேஷ்" (குடிகார ரமேஷ்) என்று அழைக்கப்பட்டார்.[1]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் 2015 இல், சுவாதி என்பவரை மணந்தார்.[5] ரமேஷ் ஈடிவி தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் எனற நிகழ்ச்சியின் குழு தலைவராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Kumar, Hemanth. "I believe in God's screenplay: Ramesh Interview". Post Noon. Archived from the original on 10 July 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.
  2. Kumar, Hemanth. "I believe in God's screenplay: Ramesh Interview". Post Noon. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.
  3. "Applause For Mahatma Ramesh". CineGoer. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.
  4. "Tagubothu Ramesh Interview". Telugu Muchatlu. Archived from the original on 3 September 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.
  5. Hooli, Shekhar H. (28 May 2015). "Comedian Thagubothu Ramesh Wedding: Dhanraj, Venu, Telugu Stars Attend Ceremony [PHOTOS]". International Business Times, India Edition. Archived from the original on 28 April 2019. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகுபோத்து_ரமேஷ்&oldid=4173301" இலிருந்து மீள்விக்கப்பட்டது