தாகுரா இசுமி
சப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர்
தாகுரா இசுமி (Takura Izumi) (泉 拓良, இசுமி தாகுரா, பிறப்பு : 1948) சப்பானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் பேராசிரியராகவும், நாரா பல்கலைக்கழகத்தின் எமரிட்டசு பேராசிரியராகவும் உள்ளார். இவர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் தொல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மேலும் சோமன் மட்பாண்டங்களின் தோற்றம் மற்றும் சப்பானின் ஆரம்பகால வரலாறு பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் சப்பானிய தொல்பொருள் சங்கம், கலாச்சார பண்புகள் பற்றிய சப்பான் அறிவியல் ஆய்வுகள் சங்கம், மேற்கு ஆசிய தொல்பொருள் சங்கம், மேற்கு ஆசிய தொல்லியல் துறைக்கான சப்பானிய சங்கம், சப்பான் ஓரியண்ட் சொசைட்டி மற்றும் சப்பானில் கிழக்கு ஆய்வுகளுக்கான சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "泉 拓良/イズミ タクラ/Takura Izumi" (in Japanese). Kyoto University. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)