தாகூர் பஞ்சனன் மகிளா மகாவித்யாலயா
தாகூர் பஞ்சனன் மகிளா மகாவித்யாலயா என்பது மேற்கு வங்காளத்தின் கூச் பெகாரில் 1981 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் இளங்கலைக்கான பெண்கள் கல்லூரியாகும். பல்வேறு பிரிவுகளில்இளங்கலைக் கல்வியை பயிற்றுவிக்கும் வழங்கும் இக்கல்லூரி கூச் பெகர் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [1] மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) C + என தரமதிப்பிடப்பட்டு, அங்கீகாரம் பெற்றுள்ளது.[2]
கல்லூரியின் முகப்பு | |
வகை | இளங்கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1981 |
முதல்வர் | சதி சிங் |
அமைவிடம் | இதழ் சாலை, முகுல்தங்கா , , , 736101 , 26°19′03″N 89°26′59″E / 26.3174715°N 89.4496858°E |
வளாகம் | கிராமப்புறம் |
சேர்ப்பு | கூச் பெகர் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழகம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
படிமம்:Thakur Panchanan Mahila Mahavidyalaya.jpg | |
கூச் பெகாரைச் சேர்ந்த ராஜ்பன்ஷி இனத்தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ரே சாஹேப் தாக்கூர் பஞ்சனன் பர்மாவைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயர் இக்கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கூச் பெகர் மாவட்டத்தில் உள்ள ஒரே பெண்கள் கல்லூரியான இது மகிளா கல்லூரி கூச் பெஹார் என்றும் அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு முழுமையான மற்றும் சமமான சிறந்த கல்வியை வழங்குவதையும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார அளவில் தேசியப் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் பெண்கள் பங்களிக்கவும் இக்கல்லூரி பாடுபடுகிறது.
வரலாறு
தொகுதாகூர் பஞ்சனன் மகிளா மகாவித்யாலயா 18 செப்டம்பர் 1981 இல் நிறுவப்பட்டது, ஆரம்பத்தில் வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி தற்போது கூச் பெகர் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூச் பெஹார் பஞ்சனன் பர்மா உமிவர்சிட்டி என்ற அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இக்கல்லூரி இயங்கிவருகிறது. கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதியின் பெண்களிடையே மேம்பட்ட கல்வியைப் பரப்புவதையும், அவர்களைப் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இக்கல்லூரி பயிற்றுவிக்கிறது.
துறைகள்
தொகுகலைப்பிரிவு
- ஆங்கிலம்
- வங்காளம்
- வரலாறு
- தத்துவம்
- அரசியல் அறிவியல்
- பொருளாதாரம்
- புவியியல்
- சமஸ்கிருதம்
- கல்வி
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி, டிசம்பர் 1993 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வின் பிரிவு 2 (எஃப்) மற்றும் 12 (பி) கீழ் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மேலும் 2004 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் சி + தரமதிப்பீடு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Colleges under Cooch Behar Panchanan Barma University பரணிடப்பட்டது 2016-01-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "NAAC Accredited Colleges in West Bengal". NAAC. Archived from the original on 11 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.