தாக்கம் கட்சி


தாக்கம் கட்சி தாக்கம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தமிழ்நாட்டில் செயல்படும் ஒர் அரசியல் கட்சி ஆகும். தாக்கம் கட்சியின் உறுப்பினர்கள் தாக்கம் கட்சியை துவங்குவதற்கு முன்பு 12 ஆண்டுகளாக சமூக சேவை அமைப்பாக இயற்கை, தமிழ், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சிக்காக சமூக பணியாற்றி இருக்கிறார்கள்.[1]

தாக்கம் கட்சியின் கொடி

தொகு

பச்சை வண்ணக் கொடியில் நான்கு முனைகளில் வெள்ளை நிறத்தில் மீன்,புலி,வில் மற்றும் காளை மாடு உடனும் கொடியின் மையத்தில் இளஞ்சிவப்பு நிற வட்டத்தில் வெள்ளை நிற மரத்துடனும் தாக்கம் கட்சியின் கொடி காட்சியளிக்கிறது.

தாக்கம் கட்சியின் நிர்வாகிகள்

தொகு
  • தலைவர் : P.சேகர்
  • செயலாளர் : S.வெங்கடேசன்
  • பொருளாளர் :  B. ஆனந்த்
  • துணை தலைவர் : அ.செல்வகுமார்
  • துணை பொதுச்செயலாளர் : ஆ.சக்திவேல், சு.காமேஷ்குமார், ஜெயஸ்ரீ
  • துணை பொருளாளர் : திரு.L.தினேஷ்குமார்
  • செய்தி தொடர்பாளர் : I முகம்மத் யாசின்

தேர்தல்கள்

தொகு

2024 இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் வடசென்னை,மத்திய சென்னை,தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர்,ஆரணி கன்னியாகுமரி என 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான விக்கிரவாண்டி தொகுதி என் இடைத்தேர்தலிலும் தாக்கம் கட்சி தீப்பெட்டி சின்னத்தில் போட்டிட்டு கணிசமான வாக்குகளை பெற்றனர்.

கொள்கைகள்.

தொகு
  • கொடி மாட்டோம் செடி நடுவோம்.
  • சுவரொட்டி ஒட்ட மாட்டோம் சுத்தம் செய்வோம்.
  • பதாகை வைக்க மாட்டோம் பண்பாய் நடந்து கொள்வோம்.
  • கட்சியின் வரவு செலவு கணக்கு வெளிப்படை தன்மையுடன் இருக்கும்.

ஆகியவைகளை தாக்கம் கட்சிக் கொள்கையாக கொண்டுள்ளது.

உறுப்பினர்கள்.

தொகு

தாக்கம் கட்சியில் 45 பொதுக்குழு உறுப்பினர்களும்30 செயர்க்குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

தாக்கம் கட்சி தனது உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அளவை வரையறைக்குள் வைத்துள்ளது.

இணையதளம்

தொகு

www.thakkam.com

  1. N.S.K, Sangeethratha (2022-01-30). "ALWARGAR PAASURANGALIL THIRUKURALIN THAKKAM". International Research Journal of Tamil Literary Studies: 11–18. doi:10.34256/vp2212. பன்னாட்டுத் தர தொடர் எண்:2582-7030. http://dx.doi.org/10.34256/vp2212. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கம்_கட்சி&oldid=4147906" இலிருந்து மீள்விக்கப்பட்டது