தாக்கரே பூனைப்பாம்பு
தாக்கரே பூனைப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போயிகா
|
இனம்: | போ. தாக்கரேய்
|
இருசொற் பெயரீடு | |
போயிகா தாக்கரேய் கிரி மற்றும் பலர், 2019 |
போயிகா தாக்கரேய் (Boiga thackerayi) அல்லது தாக்கரே பூனைப்பாம்பு என்பது மரத்தில் வாழக்கூடிய, பெரும்பாலும் வனப்பகுதியில் நீரோடைகளுக்கு அருகில் காணப்படும் போயிகா பேரினத்தினைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் இரவாடுதல் வகையின. இது பின்பக்க கோரைப்பற்கள் கொண்டது. இந்த பாம்பு மூன்று அடி நீளம் வரை வளரும் என அறியப்படுகிறது. தாக்கரே பூனைப்பாம்பு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய உயிரி.[1]
சொற்பிறப்பியல்
தொகுஇந்தியாவினைச் சேர்ந்த வனவிலங்குப் பாதுகாவலரும் ஆய்வாளருமான தேஜசு தாக்கரேயின் நினைவாக தாக்கரேய் என இதன் சிற்றினப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[2][3][4][5][6]
புவியியல் வரம்பு
தொகுபோய்கா தாக்கராய் இந்தியாவின் மேற்கு மகாராட்டிராவில் உள்ள சாத்தாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா பகுதியில் காணப்படுகிறது.
உணவு
தொகுஇது ஹுமாயூனின் இரவு தவளையின் (நிக்டிபேட்ரச்சசு ஹுமாயூனி) முட்டைகளை உண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பூனைப் பாம்புகளில் தாக்கரே பூனைப்பாம்பின் நடத்தை இதுவரை அறியப்படவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Boiga thackerayi GIRI, DEEPAK, CAPTAIN, PAWAR & TILLACK, 2019". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Uddhav's son Tejas Thackeray discovers new snake species". The Week. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Newly discovered snake named after Uddhav Thackeray's son". The Indian Express. The Indian Express [P] Ltd. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "News Species Of Cat Snake Found In Maharashtra, Named After Uddhav Thackeray's Family". Mid-Day. Mid-Day Infomedia Ltd. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Thackeray's cat snake and a case of mistaken identity". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "New Snake Species Named After Uddhav Thackeray's Younger Son For His Contribution To Its Discovery". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.