தாஜ் மாபெரும் விழா
தாஜ் மாபெரும் விழா (மஹோத்சவ்) ( இந்தி : ताज महोत्सव, உருது : تاج مہوتسو, மொழிபெயர்ப்பு : தாஜ் திருவிழா ) என்பது இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஷில்ப்கிராமில் (தாஜ் மகாலின் கிழக்கு வாசலருகில்) ஆண்டுதோறும் 10 நாட்கள் வரை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும்.[1] இந்த திருவிழா 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் உத்தரபிரதேசத்தில் நிலவிய பழைய முகலாய சகாப்தம் மற்றும் நவாபி பாணி விழாக்களின் பால் ஈர்க்கப்பட்டு நடத்தப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில், தாஜ் மஹோத்சவ் முதன்முதலில் பிப்ரவரியில் ஆக்ராவில் கொண்டாடப்பட்டது. இந்திய அரசின் சுற்றுலாத் துறை இதை ஏற்பாடு செய்தது.
கலை மற்றும் கைவினை
தொகுஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளைக் இங்கே காட்சிப்படுத்தியுள்ளார்கள். இவற்றில் இருந்து மரம்/கல் செதுக்கல்கள் (சிலைகள்) அடங்கும்.தமிழ்நாட்டில் இருந்து மரம்/கல் செதுக்கல்கள் (சிலைகள்) வேலைப்பாடுகள், வடகிழக்கு இந்தியாவிலிருந்து மூங்கில்/கரும்பு வேலைப்பாடுகள், தென்னிந்தியா மற்றும் காஷ்மீரிலிருந்து காகித மேஷ் வேலைப்பாடுகள், ஆக்ராவிலிருந்து பளிங்கு மற்றும் சர்டோசி வேலைப்பாடுகள்,சகாரன்பூரிலிருந்து மர செதுக்குதல் ,மொராதாபாத்திலிருந்து பித்தளை போலிகள்,பதோகியில் இருந்து கையால் செய்யப்பட்ட தரைவிரிப்புகள் வேலைப்பாடுகள், குர்ஜாவிலிருந்து மட்பாண்ட வேலைப்பாடுகள், பனாரஸ்லிருந்து பட்டு மற்றும் புடவை வேலைப்பாடுகள், காஷ்மீர்/குஜராத்திலிருந்து சால்வைகள் மற்றும் தரைவிரிப்புகள் வேலைப்பாடுகள், பருகாபாத்திலிருந்து கை தையல் வேலைப்பாடுகள் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து கந்த தையல் வேலைப்பாடுகள் போன்றவைகள் இங்கு கண்காட்சியில் வைக்கப்படும்.[2]
கலாச்சாரம்
தொகுமுகலாய பேரரசர்கள் மற்றும் போர்வீரர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றின் மாதிரிகள்,அலங்கரிக்கப்பட்ட யானைகள் மற்றும் ஒட்டகங்களில் வைக்கப்பட்டு, சாலை வழியாக ஊர்வலமாக செல்வதில் இருந்து இந்த திருவிழா தொடங்குகிறது. மேளம் அடிப்பவர்கள், எக்காளம் வாசிப்பவர்கள், நாட்டுப்புற நடனக் கலைஞர்கள், மற்றும் திறமையான கைவினைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தியா முழுவதிலுமிருந்து கலைஞர்கள் தங்கள் கலை மற்றும் கைவினைத்திறனைக் காட்ட இங்கு வருகிறார்கள்.
முயற்சிகள்
தொகுஉத்தரப் பிரதேச மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் நிகழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வைப் பற்றி பிரச்சாரம் செய்ய பல்வேறு நாட்டுப்புற நடனங்களைப் பயன்படுத்துகிறது.அதைப்போல பல்வேறு சமூக, அரசு திட்டங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கருப்பொருள்
தொகுஒவ்வொரு ஆண்டும் தாஜ் மஹோத்சவ் உலகிற்கு ஒரு செய்தி அல்லது கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் தாஜ் மஹோத்சவின் தீம் "விராசத் की छाँव में" ("பாரம்பரியத்தின் நிழலில்"). இந்த கருப்பொருளின் மூலம், திருவிழாவின் பின்னணியை வழங்கும் மண்டலத்தின் முழு பாரம்பரியமும் வலியுறுத்தப்படுகிறது.
2022 ம் ஆண்டின் கருப்பொருள் ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ் சங், தாஜ் கே ரங் (Aazadi ke Amrit Mahotsav sang, Taj ke rang என்பதாகும். அதன்படி 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கடின உழைப்பு, புதிய யோசனைகள் மற்றும் உறுதிமொழிகள் போன்றவைகளின் கலவையாக இது மக்களுக்கு உத்வேகத்திற்கான தீர்வையும் குறிக்கும் வகையில் இந்த பொருளைக் கொண்டுள்ளது.
2023 ம் ஆண்டின் கருப்பொருள் உலக சகோதரத்துவம் மற்றும் ஜி-20 என்பதாகும். பாரதப்பிரதமர் இந்த ஆண்டில் ஜி - 20 நாடுகளின் கூட்டமைப்பில் தலைவராக இருப்பதை முன்னிட்டு இந்த கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக சுஷில் சரித் 'லேகர் மன் மே பவ் விஸ்வ பந்துத்வா கா, ஹம்னே பிரேம் கே சதா தரனே கயே ஹைன்...' என்ற பாடலை எழுதியுள்ளார். இதற்கு கஜல் பாடகர் சுதிர் நாராயண் இசையமைத்துள்ளார்.[3]
இந்த விழா 2023 ம் ஆண்டில் பிப்ரவரி 18 முதல் 27 வரை நடைபெறுகிறது. இம்முறையும் பிரமாண்டமான முறையில் அரசால் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
நுழைவு கட்டணங்கள்
தொகு- நுழைவுச் சீட்டு ரூ. 50/- (5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசம்).
- அனைத்து வெளிநாட்டு பார்வையாளர்களுக்கும் இலவச நுழைவு உள்ளது.
- பள்ளிச் சீருடை அணிந்த 100 பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.500/- (பள்ளிக் குழுவுடன் 2 ஆசிரியர்களுக்கு இலவச அனுமதி) [4]