தாட்டா தர்பார்

தாட்டா தர்பார் (ஆங்கிலம்: Data Darbar)(உருது: داتا دربار‎) என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாபின் லாகூர் நகரில் அமைந்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய சூஃபி ஆலயம் ஆகும். இது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்ததாக நம்பப்படும் முஸ்லீம் சூஃபி அபுல் ஹசன் அலி கூஜ்விரி என்பவரை அடக்கம் செய்ய இது கட்டப்பட்டது. பொதுவாக தாட்டா கஞ்ச் பக்ச் என அழைக்கப்படுகிறது. இந்த தளம் லாகூரில் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. [1] மேலும் அதன் வருடாந்திர உருசு திருவிழாவிற்கு இலட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இருப்பிடம்

தொகு

லாகூரின் சுவர் சூழ்ந்த நகரத்தின் பாடி கேட் அருகே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இந்த ஆலயம் முதலில் 11 ஆம் நூற்றாண்டில் லாகூரின் புறநகரில் கூசுவிரி கட்டிய மசூதிக்கு அடுத்த ஒரு எளிய கல்லறையாக நிறுவப்பட்டது. [2] 13 ஆம் நூற்றாண்டில், பெரிய சூஃபி புனிதர்களின் ஆன்மீக சக்திகள் அவர்களின் அடக்கம் செய்யப்பட்ட இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கை முஸ்லிம் உலகில் பரவலாக இருந்தது. [3] எனவே முகலாய காலத்தில் கூஜ்விரியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நினைவுகூரும் வகையில் ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் வளாகம் 19 ஆம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப்பட்டது, கூஜ்விரியின் மசூதி மீண்டும் கட்டப்பட்டது.

 
இந்த ஆலயத்தில் 11 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி அலி கூஜ்சுவிரியின் கல்லறை உள்ளது .

1960 ஆம் ஆண்டு "ஆக்ஃப் கட்டளைச் சட்டத்தின்" ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள ஆலய பராமரிப்பாளர்கள் பக்தர்களை நிதி ரீதியாக சுரண்டுவதைத் தடுக்கும் அதிகாரப்பூர்வ நோக்கத்துடன் இந்த ஆலயம் பாக்கித்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. [4] 1980 களில் இராணுவ சர்வாதிகாரி ஜியா உல்-ஹக்கின் ஆட்சியில் இந்த ஆலயம் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த சமயத்தில் இந்த ஆலயம் தெற்காசியாவில் மிகப்பெரியதாக மாறியது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான அலுவலகங்கள், ஒரு நூலகம், மதரஸா, காவல் நிலையம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் அவரது ஆட்சியின் கீழ் சேர்க்கப்பட்டன. இசை நிகழ்ச்சிகளுக்கான கட்டப்பட்ட இடங்கள் மற்றும் புதிய இலவச சமையலறைகளும் அந்த நேரத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பெரிய விரிவாக்கத்திலிருந்து தளத்தை சுற்றி புதிய சந்தைகள் உருவாகியுள்ளன.

1965 ஆம் ஆண்டு முதல், மெகபில்-இ-சாமா என்ற 2 நாள் கவ்வாலி இசை விழா, சன்னதிக்கு அருகில் நடைபெற்றது. இது 1992 இல் அருகிலுள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டது. [5]

பயங்கரவாத தாக்குதல்கள்

தொகு

2010 சூலை 1 அன்று , இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகள் சன்னதியைத் தாக்கினர். இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர். [6] [7] [8] 2019 மே 8, அன்று, அதே இடத்தில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதில் காவல்துறை அதிகாரிகள் சதாம் உசேன், தலைமை காவலர்களான சாகித் நசீர், முகம்மது சோகைல், குல்சார் அகமது, மற்றும் காவலர் முக்ம்மது சலீம், மற்றும் பாதுகாப்பு காவலர் ரபாக்கத் அலி ஆகியோர் பெண் பார்வையாளர்கள் நுழைவாயில் அருகே கொல்லப்படனர்.[9]

கட்டிடக்கலை

தொகு
 
இந்த ஆலயத்தின் மசூதி 1980 களில் நவீனத்துவ கட்டடக்கலை பாணியைப் பயன்படுத்தி மீண்டும் கட்டப்பட்டது.

செதுக்கப்பட்ட வெள்ளை பளிங்குகளால் வடிவமைக்கப்பட்ட முகலாய காலத்து கல்லறையில் கூஜ்விரியின் ஆலயம் அமைந்துள்ளது. கல்லறை ஒரு பெரிய பளிங்கு முற்றத்தால் சூழப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆலய வளாகத்தில் ஒரு புதிய கல்வி நிறுவனம் நவீனத்துவ கட்டிடக்கலைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. [10]

சமூக சேவைகள்

தொகு

இந்த ஆலயம் பல்வேறு வகையான சமூக சேவைகளை வழங்குகிறது. இது வறிய மக்களுக்கு பிரபலமான மையமாக மாறியுள்ளது. [11] 1,000 ஆண்டுகள் பழமையான ஒரு வழக்கத்தில், [12] ஒரு நாளைக்கு 50,000 பார்வையாளர்கள் வரை ஆலயத்தியில் இலவச உணவு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட சிரமங்களை எதிர்கொள்ளும் புரவலர்கள், ஏழைகளுக்கு உணவளிப்பதில் இஸ்லாம் வலியுறுத்துவதற்கு ஏற்ப, சன்னதியின் இலவச சமையலறை நிதிக்கு பணம் அல்லது உழைப்பை அடிக்கடி நன்கொடை செய்கிறார்கள். இந்த ஆலயம் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் கல்வியையும் வழங்குகிறது, மேலும் அதன் சமூக பணியின் ஒரு பகுதியாக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு நிதியளிக்க உதவுகிறது.

அணுகல்

தொகு

இந்த ஆலயம் எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும். மேலும் வளாகத்திற்குள் சுதந்திரமாக நுழையும் பார்வையாளர்களை வரவேற்கிறது. இந்த ஆலயத்தை தினசரி சுமார் 30,000 முதல் 60,000 பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர், [13] மத விடுமுறை நாட்களிலும் வியாழக்கிழமைகளிலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. ஆலயங்களை பார்வையிடுவதற்கான பாரம்பரிய இரவாக உள்ளது. அதன் வருடாந்திர உருஸ் திருவிழாவின் போது சுமார் 1,000,000 பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்த ஆலயம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது..

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Halafoff (2016). Religion and Development in the Asia-Pacific: Sacred Places as Development Spaces. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317647454. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  2. Linus Strothman (2016). Tschacher, Torsten; Dandekar, Deepra (eds.). Islam, Sufism and Everyday Politics of Belonging in South Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317435969. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  3. Richard M. Eaton (1984). Metcalf, Barbara Daly (ed.). Moral Conduct and Authority: The Place of Adab in South Asian Islam. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520046603. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  4. Linus Strothman (2016). Tschacher, Torsten; Dandekar, Deepra (eds.). Islam, Sufism and Everyday Politics of Belonging in South Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317435969. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  5. Nettl, Bruno; Arnold, Alison (2000). The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824049461. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  6. "Explosions at famous shrine in Pakistan kill dozens". CNN. 2 July 2010. பார்க்கப்பட்ட நாள் 3 July 2010.
  7. "Deadly blasts hit Sufi shrine in Lahore". BBC. 1 July 2010. பார்க்கப்பட்ட நாள் 1 July 2010.
  8. Tavernise, Sabrina (1 July 2010). "Blasts at Sufi Shrine in Pakistan Kill at Least 35". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 1 July 2010.
  9. "8 Dead In Blast Near Sufi Shrine In Lahore; We Were Targets, Says Police". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
  10. Sacred Spaces: A Journey with the Sufis of the Indus. Peabody Museum Press. 2010. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  11. Islam, Sufism and Everyday Politics of Belonging in South Asia. Routledge. 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  12. Religion and Development in the Asia-Pacific: Sacred Places as Development Spaces. Taylor & Francis. 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  13. Linus Strothman (2016). Tschacher, Torsten; Dandekar, Deepra (eds.). Islam, Sufism and Everyday Politics of Belonging in South Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317435969. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Data Durbar Complex
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்டா_தர்பார்&oldid=3589133" இலிருந்து மீள்விக்கப்பட்டது