லாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரம்

(சுவர்கள் சூழ்ந்த இலாகூர் நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரம் (ஆங்கிலம்: Walled City of Lahore உருது: اندرون شہر‎ ) "பழைய நகரம்" என்றும் அழைக்கப்படும் இது பாகிஸ்தானின் லாகூரின் வரலாற்று மையமாக அமைந்துள்ளது. சுவர்கள் சூழ்ந்த நகரத்தின் மேற்குப் பகுதியில் இந்த நகரம் பொ.ச. 1000 இல் நிறுவப்பட்டது. இது இடைக்காலத்தில் ஒரு மண் சுவரால் பலப்படுத்தப்பட்டது.

முகலாய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சுவர்கள் சூழ்ந்த நகரம் முக்கியத்துவம் பெற்றது. இதன் விளைவாக லாகூர் கோட்டை இப்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும், நகரத்தின் புதிய வலுவூட்டப்பட்ட சுவர்களாகவும் அமைந்தது. முகலாய காலத்தில் இந்த சுவர்கள் சூழ்ந்த நகரத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்கள் ஏற்பட்டன. லாகூரின் மிகச் சிறந்த சில கட்டுமானங்கள் இங்கு அமைந்துள்ளன. அதாவது அழகாக அலங்கரிக்கப்பட்ட வசீர் கான் மசூதி, பிரமாண்டமான பாத்சாகி மசூதி மற்றும் சாகி அம்மாம் போன்றவை . சீக்கிய ஆட்சியின் கீழ், நகரம் மீண்டும் தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரஞ்சித் சிங்கின் சமாதி மற்றும் குருத்வாரா ஜனம் அஸ்தான் குரு ராம் தாஸ் உள்ளிட்ட பல மதக் கட்டடங்களுடன் இந் நகரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.

சுவர்கள் சூழ்ந்த நகரம் இன்று லாகூரின் கலாச்சார மையமாக உள்ளது. மேலும் அது பல சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில், லாகூர் அதிகாரசபையின் சுவர்கள் சூழ்ந்த நகர நிர்வாகத்தின் கீழ் வசீர் கான் மசூதி மற்றும் தில்லி வாயில் இடையே சாகி குசர்காவின் ("அரசருக்குரிய பாதை") ஒரு பகுதியை மீட்டெடுப்பதற்காக பைலட் நகர பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (சாகி குசர்கா திட்டம்) ஒன்று தொடங்கப்பட்டது. [1] இந்த திட்டத்தின் முதல் கட்டம் நோர்வே மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் ஆதரவோடு 2015 இல் நிறைவடைந்தது.

வரலாறு

தொகு

தோற்றம்

தொகு

லாகூரின் தோற்றம் தெளிவற்றவை. லாகூர் கோட்டையில் உள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகளிலிருந்து கார்பன் மூலம் கால அளவை முறை ஆதாரங்களின்படி, கி.மு. 2,000 க்கு முன்பே இப்பகுதியில் குடியேற்றம் இருந்துள்ளது. லாகூருக்கு அதன் வரலாறு முழுவதும் பல பெயர்கள் இருந்துள்ளன. மொகல்லா மௌலியன் முதலில் அசல் லாகூரின் இரண்டு சாத்தியமான தளங்களில் ஒன்றைக் குறிக்கிறது.

இடைக்காலம்

தொகு
 
நீவின் மசூதி லாகூரின் மீதமுள்ள இடைக்கால சகாப்த கட்டிடங்களில் ஒன்றாகும்.

நவீன நகரம் நிறுவப்பட்டது பொ.ச. 1000 க்கு முன்பே இருந்திருக்கலாம் என்றாலும், மத்திய ஆசியாவிலிருந்து வந்த முஸ்லீம் ஆட்சியாளர்களின் படையெடுப்பால் மட்டுமே லாகூர் முக்கியத்துவம் பெற்றது. [2] கசானவித்து, கோரி வம்சம் மற்றும் தில்லி சுல்தானகத்தின் காலத்தில் இந்த நகரம் ஒரு தலைநகராக செயல்பட்டது. ஆனால் சுமார் 1400 வரை பரவலாக குறிப்பிடப்படவில்லை. இப்னு பதூதா இந்நகரத்தைப் பற்றி அறிந்திருந்தார். ஆனால் அதைப் பார்க்க வேண்டாம் என்று தேர்வுசெய்தார். அதே நேரத்தில் தைமூர் தனது 1398 படையெடுப்பில் நகரதை அழிக்கத் தொடங்கினார். இப்பணியை தனது துணை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இடைக்கால கசானவித்து காலத்தில் லாகூர் நகரம் முழுவதும் நவீன சா அலமிக்கு மேற்கே, பட்டி வாயிலுக்கு வடக்கே அமைந்திருக்கலாம். [2] தத்தா தர்பார் சன்னதி, மாலிக் அயாசின் கல்லறை மற்றும் அய்பக் கல்லறை உள்ளிட்ட நகரின் முகலாய காலத்திற்கு முந்தைய பல கல்லறைகள் இந்த வெளிப்புறத்தின் சுற்றளவில் கட்டப்பட்டுள்ளன. நவீன கும்தி கடைவீதி முகலாய காலத்திற்கு முந்தைய நகரத்தின் தெற்கு எல்லையாக இருந்திருக்கலாம்.

முகலாயர் காலம்

தொகு
 
சுவர்கள் சூழ்ந்த நகரத்தின் கசூரி பாக் என்பது பாத்சாகி மசூதி, லாகூர் கோட்டை, ரோஷ்னாய் கேட் மற்றும் ரஞ்சித் சிங்கின் சமாதி உள்ளிட்ட நினைவுச்சின்னங்களின் ஒரு மையத்தின் மையத்தில் உள்ளது.

முகலாய ஆட்சியின் காலப்பகுதியில், அதன் மக்களில் பெரும்பாலோர் சுவர்கள் சூழ்ந்த நகரத்திற்குள் வசிக்கவில்லை. மாறாக நகரின் சுவர்களுக்கு வெளியே பரவியிருந்த புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்தனர். [2] குஜார் என அழைக்கப்படும் லாகூரைச் சுற்றியுள்ள 36 நகர்ப்புற இடங்களில் 9 மட்டுமே அக்பர் காலத்தில் நகரின் சுவர்களுக்குள் அமைந்திருந்தன. இந்த காலகட்டத்தில், லாகூர் நவீன இந்தியாவில் கசூர், எமினாபாத் மற்றும் பட்டாலா போன்ற சிறிய சந்தை நகரங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. இவை, ஒவ்வொரு நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தொடங்கி சங்கிலிகளாக லாகூரின் சந்தைகளை இணைத்தன .

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Qureshi, Tania (3 October 2015). "Shahi Guzargah" inside the Walled City of Lahore". Pakistan Today. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  2. 2.0 2.1 2.2 Glover, William (2008). Making Lahore Modern. U of Minnesota Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781452913384.

வெளி இணைப்புகள்

தொகு