தாணிக்கூடம் பகவதி கோயில்

தாணிக்கூடம் பகவதி கோயில் இந்தியாவில் கேரளாவில் உள்ள திருச்சூர் நகரின் தாணிக்குடத்தில், தாணிக்கூடம் ஆறு என்றழைக்கப்படுகின்றபுழக்கல் ஆற்றின் கரையில் உள்ள ஒரு இந்து கோயிலாகும். இக்கோயில் 'நானாதுர்கா' வடிவில் உள்ள பத்ரகாளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூலவர் சன்னதிக்குள் நுழையும் போது, முழு சிலையும் மூழ்கும் போது நடைபெறுகின்ற 'ஆராட்டு' விழாவிற்கு பிரபலமானது. இத்தகைய விழா கொண்டாடப்படுகின்ற அரிய கோயில்களில் இக்கோயில் ஒன்றாகும். இது கொச்சி தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புராணம்

தொகு

புழக்கால் ஆறு அல்லது உள்ளூரில் தாணிக்குடம் ஆறு என்று அழைக்கப்படுகின்ற ஆறானது, மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வந்து கோயிலில் உள்ள சிலையை மூழ்கடிக்கும் போது ஆராட்டு விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவின் போது பக்தர்கள் சிலையுடன் தண்ணீரில் புனித நீராடுவார்கள். [1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/flow-of-devotion/article4891008.ece. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. http://www.thekeralatemples.com/templeinfo/bhagavathy/thanikudam_bhagavathy.htm. {{cite web}}: Missing or empty |title= (help)