தாண்டலம் ஆர்சனைடு

வேதிச் சேர்மம்

தாண்டலம் ஆர்சனைடு (Tantalum arsenide) என்பது TaAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாண்டலம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. கோனத் தீர்வு ஒளியுமிழ்வு நிறமாலையியலால் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்பட்ட முதல் இடவியல் வெயில் அரையுலோகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3]

தாண்டலம் ஆர்சனைடு
Tantalum arsenide
தாண்டலம் ஆர்சனைடு படிகக் கட்டமைப்பு.
     Ta      As
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/As.Ta
    Key: WCMKFCQUZDOHAQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [As].[Ta]
பண்புகள்
TaAs
வாய்ப்பாட்டு எடை 255.869 கி/மோல்
அடர்த்தி 12.25 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1400°செல்சியசு வெப்பநிலையில் சிதைவடயும் [2]
கட்டமைப்பு
படிக அமைப்பு உடல் மைய நாற்கோணகம்
புறவெளித் தொகுதி I41md, No. 109
Lattice constant a = 3.44 Å, c = 11.65 Å
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கட்டமைப்பு தொகு

a = 3.44 Å மற்றும் c = 11.65 Å ஆகிய அணிக்கோவை அளவுருக்களுடன் உடல் மையம் கொண்ட நாற்கோண அலகு செல்லில் I41md என்ற இடக்குழுவில் தாண்டலம் ஆர்சனைடு படிகமாகிறது.

தயாரிப்பு தொகு

TaAs2 சேர்மத்தை 900 °செல்சியசு வெப்பநிலையில் சிதைப்பதன் மூலம் TaAs தயாரிக்கப்படுகிறது.[1] தனிமநிலை முன்னோடிகள் மற்றும் அயோடினை போக்குவரத்து முகவராகப் பயன்படுத்தி இரசாயன நீராவி கடத்தல் மூலம் தாண்டலம் ஆர்சனைடுகளின் பெரிய ஒற்றை படிகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.:[2]

TaI5 (g) + AsI3 (g) ↔ TaAs (s) + 4 I2 (g)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "On the Arsenides and Antimonides of Tantalum.". Acta Chemica Scandinavica 19: 95–106. 1965. doi:10.3891/acta.chem.scand.19-0095. பன்னாட்டுத் தர தொடர் எண்:0904-213X. 
  2. 2.0 2.1 "Weyl Semimetal TaAs: Crystal Growth, Morphology, and Thermodynamics". Crystal Growth & Design 16 (3): 1172–1175. 2 March 2016. doi:10.1021/acs.cgd.5b01758. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7505. 
  3. "Discovery of a Weyl fermion semimetal and topological Fermi arcs". Science 349 (6248): 613–617. 7 August 2015. doi:10.1126/science.aaa9297. பன்னாட்டுத் தர தொடர் எண்:1095-9203. பப்மெட்:26184916. Bibcode: 2015Sci...349..613X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டலம்_ஆர்சனைடு&oldid=3899811" இலிருந்து மீள்விக்கப்பட்டது