தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து

இந்திய அரசியல்வாதி

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து (Thandavarayapuram Ramaswami Pachamuthu, பரவலாக டி. ஆர். பச்சமுத்து) எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.[1] இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் ஆவார். இவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். இந்திய ஜனநாயகக் கட்சி எனும் அரசியல் கட்சியினையும் நடத்தி வருகிறார்.[2]

டி. ஆர். பச்சமுத்து
T R Pachamuthu-Milan-2009.jpg
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஆர். பி. மருதராஜா
தொகுதி பெரம்பலூர்
தனிநபர் தகவல்
பிறப்பு டி. ஆர். பச்சமுத்து
ஆகத்து 24, 1941 (1941-08-24) (அகவை 81)
ஆத்தூர், சேலம்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் தலைவரும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும்

கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள பச்சமுத்து[3][4] ஓர் சான்றுபெற்ற பட்டய பொறியாளரும் (Chartered engineer) ஆவார்.[3]

இவர் புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி, எஸ். ஆர். எம் டிரான்ஸ்போர்ட் மற்றும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

பிறப்புதொகு

பச்சமுத்து, சேலம் மாவட்டம் தாண்டவராய புரத்தில் ராமசாமி - வள்ளியம்மைை என்பவருக்கு மகனாக ஆகத்து 24, 1941 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்[5]

துவக்கக்கால வாழ்கைதொகு

தன் வாழ்வின் துவக்கத்தில் இவர் சென்னையில் உள்ள பி. டி. லீ. செங்கல்வராய நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான பலதொழில்நுட்பப் பயிலகத்தில் கணித ஆசிரியராக பணியாற்றினார். அங்கு இவர் பணியாற்றும் போதே 1969 ஆம் ஆண்டில் சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் ஒரு துவக்கபள்ளியைத் தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை 1981 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார். இதன்பின்னர 1984 ஆம் ஆண்டில் வள்ளியம்மை பாலிடெக்னிக் நிறுவனத்தையும், 1985 ஆம் ஆண்டில் காட்டாங்கொளத்தூரில் எஸ். ஆர். எம். பொறியியல் கல்லூரியையும் தொடங்கினார். இதன்பிறகு பல கல்லூரிகள் இவரால் துவக்கப்பட்டன.[6]

அரசியல் வாழ்க்கைதொகு

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியிலிருந்து, இந்திய ஜனநாயகக் கட்சி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]

இவர் இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, 2,38,887 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

விருதுகள்தொகு

பர்மிங்ஹாம் நகரப் பல்கலைக்கழகம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு இவர் ஆற்றியுள்ள சேவைக்காக பெப்ரவரி 19, 2010 இல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.[9]

மேற்கோள்கள்தொகு

  1. "SRM Awards Over Rs. 5 Crores in Scholarship to Its Students". Chennai Online. Chennai Interactive Business Services. 10 April 2008. 20 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://ijkparty.org/
  3. 3.0 3.1 TEE Award Ceremony(Microsoft Silverlight)[Streamed video].Birmingham:Birmingham City University.Retrieved on 20 February 2010.Event occurs at 00:50:00. பரணிடப்பட்டது 2010-02-22 at the வந்தவழி இயந்திரம்
  4. "304 - Easwari Engineering College". WorldColleges. 2005. 25 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. The SRM Group. www.srmhotels.com. https://www.srmhotels.com/m/about-us/about-us.html. 
  6. பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது எப்படி??
  7. "பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி". 2019-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-29 அன்று பார்க்கப்பட்டது. மாலைமலர் (மே 24, 2019)
  8. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  9. "Honour for SRM Chancellor". WebIndia123. Suni Systems. 20 February 2010. 20 February 2010 அன்று பார்க்கப்பட்டது.