தாதிபா மெர்வான்ஜி தலால்

சர் தாதிபா மெர்வான்ஜி தலால் (Sir Dadiba Merwanji Dalal) (1870 திசம்பர் 12 - 1941 மார்ச் 4) [1] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பார்சி இராஜந்திரி ஆவார். மேலும் இவர், பிரித்தனில் பணியமர்த்தப்பட்ட இரண்டாவது இந்தியத் தூதருமாவார்.

புரூக்வுட் கல்லறைத் தோட்டத்தில் தாதிபா மெர்வான்ஜி தலாலின் கல்லறை

இவர் பிரித்தன் 1921 புத்தாண்டு மரியாதை பட்டியலில் இந்திய சாம்ராச்சியத்தின் ஒழுங்கின் தோழராக நியமிக்கப்பட்டார். [2] இந்திய அமைப்பின் உறுப்பினரான இவர், முதல் தூதர் சர் வில்லியம் ஸ்டீவன்சன் மேயர், முந்தைய ஆண்டில் இறந்தவுடன் 1923 சனவரியில் ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியாவின் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். [3]

தலால் 1924 புத்தாண்டு மரியாதை பட்டியலில் வீரத்திருத்தகை ஆனார். [4] [5] [6] அந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற்றார். இவருக்குப் பிறகு சர் அதுல் சந்திர சாட்டர்ஜி இந்தியத் தூதராக நியமிக்கபட்டார். 1941 மார்ச் 4 இல், பிரான்சின் ஜெர்மன் ஆக்கிரமிப்பின் போது, பாரிஸ் அமெரிக்க மருத்துவமனையில் தனது 70 வயதில் இறந்தார். [7] இவர் சர்ரேயில் உள்ள புரூக்வுட் கல்லறையின் பார்சி பிரிவில் அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதிபா_மெர்வான்ஜி_தலால்&oldid=2993740" இலிருந்து மீள்விக்கப்பட்டது