அதுல் சந்திர சாட்டர்ஜி
சர் அதுல் சந்திர சாட்டர்ஜி (Sir Atul Chandra Chatterjee) (1874 நவம்பர் 24 - 1955 செப்டம்பர் 8) இவர் ஓர் இந்திய இராஜதந்திரியும் மற்றும் இந்தியத் தூதருமாவார். இவர் 1925 முதல் 1931 வரை ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவில் உயர் பதவியில் பணியாற்றினார். மேலும் 1925 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் உலக நாடுகள் சங்கத்தின் சட்டமன்ற ஆளும் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇவர் கொல்கத்தாவில் ஹேமசந்திர சாட்டர்ஜி மற்றும் நிஸ்தாரினி தேவி ஆகியோருக்குப் பிறந்தார். சாட்டர்ஜி கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியிலும் பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். அங்கு இவர் 1896 இல் கௌரவ பட்டம் பெற்றார். 1896 ஆம் ஆண்டில், இவர் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.[2]
தொழில்
தொகு1897 முதல் 1906 வரை, சாட்டர்ஜி ஐக்கிய மாகாணங்களில் ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியாற்றினார். இறுதியில் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு உயர்ந்தார். அதன் பிறகு இவர் ஐக்கிய மாகாணங்களின் அரசாங்கத்தில் ஒரு தொழில்துறை அதிகாரியாக சிறிது காலம் பணியாற்றினார். 1919 இல் வாஷிங்டனில் நடந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டிலும், பின்னர் 1921, 1924 மற்றும் 1933 ஆகிய வருடங்களில் ஜெனீவாவில் நடந்த மாநாட்டிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1925ஆம் ஆண்டில் சர் தாதிபா மெர்வான்ஜி தலால் இந்தியாவின் தூதராக பதவியேற்கும் வரை 1931 வரை பணியாற்றினார். 1927 இல் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் தலைவராக பணியாற்றினார். 1926 முதல் 1931 வரை இவர் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளும் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் 1932இல் அதன் துணைத் தலைவராகவும், 1933இல் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாட்டர்ஜி 1930 லண்டன் கடற்படை மாநாட்டிற்கு ஒரு இந்திய பிரதிநிதியாகச் சென்றார். மேலும் 1932 இல் ஒட்டாவாவில் நடைபெற்ற பிரிட்டிசு பேரரசின் பொருளாதார மாநாட்டில் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். 1921 முதல் 1924 வரை, ஆளுநரின் நிர்வாகக் குழுவில் தொழில்துறை உறுப்பினராகவும், 1925 முதல் 1931 வரை இங்கிலாந்து உயர் அலுவலராகவும் பணியாற்றினார். அதன் பிறகு இவர் 1936 வரை இந்திய அமைப்பில் பணியாற்றினார். 1938 முதல் 1946 வரை, இவர் உலக நாடுகள் சங்கத்தின் நிரந்தர மத்திய ஓபியம் வாரியத்தின் தலைவராகவும், 1942 முதல் 1947 வரை இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இவரது சேவைகளுக்காக, 1919 பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் [3] கௌரவிக்கப்பட்டார். 1925 புத்தாண்டு மரியாதை பட்டியலில் வீரத்திருத்தகை ஆனார்.,[4] இவருக்கு 1930 சூலை 8 அன்று இந்திய நடசத்திரங்களின் ஆணை என்ற கௌரவம் வழங்கப்பட்டது.[5] 1933 ஆம் ஆண்டின் புத்தாண்டு கௌரரவங்களில் இந்திய சாம்ராச்சியத்தின் நைட் ஆக நியமிக்கப்பட்டார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசாட்டர்ஜிக்கு வீணா என்பவருடன் முதல் திருமணம் இருந்தது. இவர்களுக்கு ரேவா வயலட் மற்றும் வேரா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். வேரா பிறந்த உடனேயே வீணா இறந்து போனார். மேலும் இவரது முதல் மகள் ரேவா 1970இல் இறந்து போனார். இரண்டாவது மகள் வேரா முதல் உலகப் போருக்கிப் பின்னர் காய்ச்சல் காரணமாக இறந்து போனார்.
1924 ஆம் ஆண்டில் இவர் மருத்துவர் கிளாடிச் மேரி பிராட்டன் என்பவரை மணந்தார். கிளாடிச் இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் ஆலோசகராக இருந்துள்ளார். மேலும், ஒரு வழக்கறிஞராகவும் இருந்தார். இந்திய கல்வி சேவையிலும் பணியாற்றினார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, சாட்டர்ஜி இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். இலண்டனில் கென்சிங்டனில் குடியேறினார். அங்கு இவர் 1955இல் தனது 80 வயதில் இறந்தார். பின்னர் இவரது மனைவி இவரது புத்தகங்களை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மையத்திற்கு வழங்கினார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Conference Delegates: Sir Atul Chandra Chatterjee The Montreal Gazette, 11 Jul 1932. p. 12
- ↑ Indian Office, p. 430
- ↑ The London Gazette, 3 June 1919
- ↑ The London Gazette, 1 January 1925
- ↑ London Gazette, 8 July 1930
- ↑ "London Gazette, 1 January 1933". Archived from the original on 1 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 1 ஜூலை 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ University of Cambridge: CHATTERJEE PAPERS பரணிடப்பட்டது 13 பெப்பிரவரி 2010 at the வந்தவழி இயந்திரம் University of Cambridge
குறிப்புகள்
தொகு- Who's Who, 1954
- (Great Britain), India Office (1819). The India list and India Office. Harrison.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Williams, L F Rushbrook (2007). "45. Romesh Chunder Dutt/Atul Chandra Chatterjee". Great Men of India. Bharatiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8090-139-4.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)