தாத்

பாரம்பரிய பஞ்சாபி இசைக்கருவி

 

தாத் ( பஞ்சாபி மொழி: ਢੱਡ ), தாத் அல்லது தாட்த் என்றும் உச்சரிக்கப்படுவது பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மணல்கடிகார வடிவ பாரம்பரிய இசைக் கருவியாகும், இது முக்கியமாக தாதி பாடகர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த பகுதியின் பிற நாட்டுப்புற பாடகர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

வடிவமைப்பு மற்றும் இசைத்தல்

தொகு

தாத் என்பது மரத்தால்செய்யபட்ட மணல்கடிகார வடிவத்தை போன்றது. ஆதாவது இரண்டு சிறிய கூம்புகளை அதன் முனைகளில் இணைப்பது போன்றது. இருபுறமும் உள்ள தோல் ஆனது கயிறுகள் கொண்டு இறுக்கி, கருவியை ஒன்றாகப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. இதன் வடிவமைப்பு மற்ற இந்திய டிரம்ஸைப் போலவே உள்ளது: எளிமையான டம்ரு, உடுக்கை மற்றும் அதிநவீன இடக்கா . டம்ரு(Damru) அதன் முனைகளைத் தாக்குவதற்கு கயிறுகளை முடிச்சு போட்டுள்ளது, ஆனால் தாத்-ல் அத்தகைய கயிறுகள் இல்லை. டம்ருவை விரைவாக அசைப்பதன் மூலம்/சுழற்றுவதன் மூலம் இசைக்கப்படுகிறது. இதனால் முடிச்சு கயிறுகள் அதன் முனைகளைத் தாக்கும், மேலும் சில சமயங்களில் ஒரு குச்சியால் அடித்தும் இசைக்கபடுகிறது . உடுக்கை மற்றும் தாத் விளையாடுவதில் ஒரே மாதிரியான நுட்பங்கள் உள்ளன. ஆனால் சமூக முக்கியத்துவம் வேறுபட்டது.

இசைத்தல்
 
மையத்தில் இருக்கும் ஒரு கலைஞரால் தாத் இசைக்கப்படுகிறது.

தாத் , அதன் ஒரு முனையில் விரல்களால் தட்டுவதன் மூலம் அல்லது அடிப்பதன் மூலம் இசைக்கபடுகிறது. இதன் மெல்லிய மைய பகுதியை சுற்றியுள்ள கயிறுகளை இறுக்கி தாத்-ன் சுருதி உயர்த்தப்படுகிறது. மூடிய மற்றும் திறந்த ஒலிகளையும் உருவாக்க முடியும்.

சமூக முக்கியத்துவம்

தொகு

தாத் இசை கருவி ஆனது தாடி பாடகர்களால் மிகவும் இயல்பாக பயன்படுத்த கூடிய மற்றும் அவர்களின் வாழக்கையுடன் நெருங்கிய தொடர்புடையது ஆகும். சாரங்கியுடன்(Sarangi)இதைப் பயன்படுத்தி நாட்டுப்புற, மத மற்றும் போர்வீரர்களின் பாலாட்கள் மற்றும் வரலாற்றைப் பாடும்

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. http://punjabijanta.com/lok-virsa/dhaddi-and-dhadd-sarangi/?nowap.
  2. http://chandrakantha.com/articles/indian_music/dhad.html பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாத்&oldid=3732442" இலிருந்து மீள்விக்கப்பட்டது