தாத்தமங்கலம் குதிரை வேலா
தாத்தமங்கலம் குதிரை வேலா அல்லது அங்கடி வேலா (Tattamangalam Kuthira Vela அல்லது Angadi Vela) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாத்தமங்கலம் என்ற சிற்றூரில் நடத்தப்படும் ஒரு திருவிழா. மலையாள மொழியில் குதிரா என்றால் " குதிரை " என்றும் வேலா என்றால் "திருவிழா" என்றும் பொருள். திருவிழாவின் போது, உள்ளூர் மக்களால் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. குதிரை செலுத்துபவர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இங்கு கரியால் கருப்பு நிறத்தை உடலில் பூசிக்கொண்ட பல தன்னார்வலர்களைக் காணலாம்; இந்த ஆடவர் பந்தயத்தைக் காண்பதற்காக சாலையோரம் நிற்கும் மக்களைக் கட்டுப்படுத்தும் காவலர்கள் ஆவர். இது கரி வேலா என்றும் அழைக்கப்படுகிறது.
குதிரை வேலாவின்போது, மாநில நெடுஞ்சாலை 27 இன் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கே.எஸ்.இ.பி. அலுவலகத்திலிருந்து வேட்டக்கருப்பன் சுவாமி கோயில் வரை கூடுகிறார்கள்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- குதிரா வேலா 2007 ஒளிப்படங்கள் - 28 ஏப்ரல் 2007 பரணிடப்பட்டது 2020-08-08 at the வந்தவழி இயந்திரம்
- தத்தமங்கலம் குதிரா வேலா ஒளிப்படங்கள் - 200 க்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் கிடைக்கின்றன பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
- மேலும் தொடர்புடைய ஒளிப்படங்கள் - கேரள விழாக்கள்
- ஒளிப்பட வலைப்பதிவு
- தத்தமங்கலம்.காம்