முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாந்தியா தோபே

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
தன் படைகளுடன் தாந்தியா தோப், 1857

தாந்தியா தோபே (1814–1859) இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா. இரண்டாம் பாஜிராவின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகன். பித்தூர் நாட்டின் நானா சாகிப்பின் நெருங்கிய நண்பர்.

சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். முறையான இராணுவப் பயிற்சி இல்லாவிடிலும் கொரில்லாப் போர் முறையில் போரிட்டு, எந்த நெருக்கடியையும் சமாளித்துத் தப்பிவிடக்கூடியவர். 1857 இல் நடந்த சிப்பாய் கலகத்தை மத்திய இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி ஆங்கிலேயருக்கு மிகுந்த துன்பம் கொடுத்தவர்.

ஜான்சி ராணிக்கு பெரிதும் துணை இருந்தவர். 1857 இல் இருந்து 1859 வரை பல இந்திய மன்னர்களுடன் சேர்ந்து பல இடங்களில் போராடியவர்.

ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்ட இவருக்கு இராணுவ நீதி மன்றம் 1859 ஏப்ரல் 15 இல் தூக்கு தண்டனை விதித்தது. தாம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் தாம் தமது மன்னரின் ஆணையின்படி செயல்பட்டதாகவும் கூறி, சங்கிலியால் கை, கால்கள் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலும் தூக்குக் கயிற்றைத் தாமே கழுத்தில் மாட்டிக் கொண்டார். 1859 ஏப்ரல் 17 அன்று[1] தளபதி தாந்தியா தோபே தூக்கிலிடப்பட்டார்.

சிலைதொகு

இவர் தூக்கிலிடப்பட்ட மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபுரி என்ற இடத்தில் இவர் நினைவாக சிலை நிறுவப்பட்டுள்ளது.[1]

உதவிநூல்தொகு

  • சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 82, 83

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாந்தியா_தோபே&oldid=2712223" இருந்து மீள்விக்கப்பட்டது