தானியங்கி நரம்பு பாதிப்பு
தானியங்கி நரம்புகள் பாதிப்பு (Autonomic neuropathy) என்பது உடலில் உள்ள முக்கிய உள்உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவும் நரம்புகளின் பாதிப்பைக்குறிக்கும். இவற்றில் முக்கியமாக இதயம், நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், மேலும் பாலுறுப்பு போன்றவைகளைக் கட்டுப்படுத்துவது தானியங்கி நரம்புகளேயாகும். இப்பாதிப்புக்கு முக்கியக்காரணம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்கட்டுப்படுத்தாததே காரணமாக அமைகிறது. தானியங்கி நரம்புகள் அதிகமாக மார்புப்பகுதி, அடிவயிறு, மற்றும் முதுகு தண்டைச் சுற்றியே அமைந்துள்ளது. இந்த நரம்புகள் தண்டுவடத்துடன் இணைக்கப்பட்டு மூளையுடன் தொடர்பு கொள்கின்றன.
தானியங்கி நரம்பு பாதிப்பு | |
---|---|
சிறப்பு | நரம்பியல் |
உறுப்புகளும், பாதிப்புகளும்
தொகு- இதய நரம்பு - இதயம் ஒழுங்கற்ற துடிப்பு, படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், உட்கார்ந்து எழுந்திருக்கும்போது தலைசுற்றுதல், மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி.[1]
- வாய் மற்றும் உணவுக்குழாய் நரம்பு - உதடுகள் உலர்ந்துவிடுதல், உணவு விழுங்குவதில் சிரமம். மனித இரையகக் குடற்பாதையில் ஏற்படும் பாதிப்பு.
- குடல் நரம்பு - வயிற்றில் வாயு சேரும், அடிக்கடி ஏப்பம் உண்டாகும், வயிற்றுப்போக்கு, மலத்தை அடக்க முடியாமல் போகுதல்.[2]
- சிறுநீர்ப்பை நரம்பு - சிறுநீரை அடக்க முடியாது, அவசரமாக வருவதுபோல் தோன்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்கநேரிடும். சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
- பாலின நரம்பு - ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை குறையும், பெண் பிறப்புறுப்பு உலர்ந்து போகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Neurogenic Bladder: Overview, Neuroanatomy, Physiology and Pathophysiology. 2019-12-05. https://emedicine.medscape.com/article/453539-overview.
- ↑ Vinik, AI; Erbas, T (2013). "Diabetic autonomic neuropathy.". Handbook of Clinical Neurology 117: 279–94. doi:10.1016/b978-0-444-53491-0.00022-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780444534910. பப்மெட்:24095132.