தாபதநிலை என்னும் துறையினவாகக் குறிக்கப்பட்ட பாடல்கள் புறநானூற்றில் மூன்று உள்ளன. மேலும் குறுங்கலி என்னும் துறையினவாகக் குறிக்கப்பட்ட ஐந்து பாடல்களும் தாபதநிலை எனக் கொள்ளத் தக்கவை என்னும் குறிப்பும் உள்ளது. இந்த ஐந்து பாடல்களும் கணவன் பேகன் பிரிந்து வாழ்வதை எண்ணி மனைவி கண்ணகி வாடுவதற்குப் பிறர் இரக்கம் காட்டும் பாடல்களாக உள்ளன. தாபதநிலை எனக் குறிப்பிடப்பட்ட மூன்று பாடல்களும் கணவன் இறந்த பின்னர் மனைவி கைமைக்கோலம் பூண்டு வாழும் பாங்கைக் கூறுகின்றன. மற்றும் தாபத வாகை என்னும் பெயர் தரப்பட்டுள்ள பாடல்கள் இல்லற வாழ்க்கைக்குப் பின்னர் துறவறம் மேற்கொண்டு வாழும் துறவு வாழ்க்கையின் வெற்றியைக் குறிப்பனவாக உள்ளன.

தாபதநிலை என்னும் கைம்மைக் கோலம் தொகு

  • கணவன் இறந்துவிட்டான் என்னும் வருத்தத்தில் மனைவி நாள்தோறும் வேளாவேளைக்கு உண்ணாமல் பொழுது மறுத்து உண்கிறாள். [1]
  • மற்றொருத்தி, முறம் அளவு மெழுகி அதிலேயே தவம் கிடக்கிறாள். [2]
  • இன்னொருத்தி, தன் கூந்தலைக் கொய்துகொண்டு, வளையல்களை உடைத்தெறிந்துவிட்டு, அல்லி இலையில் உணவு வைத்துக் குழந்தைக்கு ஊட்டிக்கொண்டு வாழ்கிறாள். [3]

இலக்கணம் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. புறநானூறு 248
  2. புறநானூறு 249
  3. புறநானூறு 250
  4. தொல்காப்பியம், புறத்திணையியல் 77
  5. குருந்தலர்க் கண்ணிக் கொழுநன் மாய்ந்து என
    கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று. புறப்பொருள் வெண்பாமாலை 257

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாபத_நிலை&oldid=3317395" இலிருந்து மீள்விக்கப்பட்டது