தாபாக்களில் பெண்கள்

தாபாக்களில் பெண்கள் (Girls at Dhabas) என்பது பாக்கித்தானின் பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒரு பெண்ணியவாத முயற்சியாகும். தாபாக்கள் என்பவை தெற்காசியாவில் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் கொண்ட களங்களான சாலையோர தேநீர் கடைகளுக்கான உள்ளூர் சொல்லாகும். 2015 ஆம் ஆண்டு இம்முயற்சி பரவலாக சமூக ஊடகங்களில் பரவியது.[1] தெற்கு ஆசியா முழுவதும் பெண்கள் தாபாக்களுக்குச் சென்று தாமி புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்ற ஊக்குவிக்கப்பட்டனர். தனிநபர் விரிவுரைகள், பிரதிபலிப்புகள் மற்றும் கதைகளும் பகிரப்பட்டன. பொது இடங்களில் பெண்கள் வருகையை ஆதரிக்கும் இவ்வியக்கம் பொதுவாக ஆதரித்தது.[2] தெருக்களில் துடுப்பாட்டம் விளையாடுதல், கராச்சி நகரத்தில் இருசக்கர வாகனத்தில் பந்தயம், லாகூர் மற்றும் இசுலாமாபாத்து நகரங்களில் இருசக்கர வாகனப் பேரணிகள், மற்றும் பல்வேறு வகையான சமுதாயத்தை உருவாக்கும் உரையாடல்கள், பிரச்சாரம் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது.

பின்னணி தொகு

இவ்வியக்கம் 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. எழுத்தாளரும் புகைப்படக் கலைஞருமான சதியா காத்ரி [3] தன்னை ஒரு தாபாவில் புகைப்படம் எடுத்தார். பின்னர் அப்படத்தை இணையத்தில் பதிவேற்றினார். பொது இடங்களில் பெண்களின் பாரம்பரியத்தை எதிர்கொள்ளும் ஒரு பெரிய, அவசர உரையாடலாக மாறும் என்பதை உணர்ந்த அவர், தனது தோழிகளான நடாசா அன்சாரி,[4] சபாகத் சகாரியா, நயியா சபாகத் கான், அம்னா சவுத்ரி, மெகர்பானா ராசா, சனயா மாலிக், யுசுரா அம்சது, சாரா நிசார் ஆகியோருடன் இணைந்தார். வளர்ந்து வரும் சமூகத்திற்காக தம்பளிர் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் நிகழ்நேர பக்கங்களைத் தொடங்கினார்.

பொது இடத்திற்கான அணுகல் தொகு

தனிநபர் மேம்பாட்டு ஆய்வாளரும் பகுப்பாளருமான தெம்ரைசு கான் அறிக்கையின் படி [5] அவுரத் அணிவகுப்பிற்காக அழைப்பு விடுக்கப்படுகிறது.

பிற முயற்சிகள் தொகு

தெருக்களில் துடுப்பாட்டம் தொகு

2015 ஆம் ஆண்டில்,துடுப்பாட்டம் விளையாடுதல் இருசக்கர வாகனம் ஓட்டுதலுக்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான நடாசா அன்சாரியின் ஆலோசனையின் அடிப்படையில், பெண்கள் தெருக்களில் இம் முயற்சியைத் தொடங்கினர். தெருக்களில் பெண்கள் துடுப்பாட்டம் விளையாட ஊக்குவிக்கப்பட்டனர்.[6] தெருத் துடுப்பாட்டம் என்பது பாக்கித்தான் இளைஞர்களிடையே பிரபலமான ஓர் உடல் செயல்பாடுகளின் வடிவமாகும்.

2016 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் லாகூரில் அனீகா அலி என்ற பெண் தனது சைக்கிளில் வெளியே சென்றபோது துன்புறுத்தப்பட்டு காயமடைந்தார்.[7] இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், கண்டனம் மற்றும் ஒற்றுமையின் செயலாகவும், தெருக்களில் பெண்கள் ஓர் இருசக்கர வாகனப் பேரணியை ஏற்பாடு செய்தனர். பின்னர் இது வருடாந்திர நிகழ்வாக மாறியது. பெண்கள் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்தை தழுவுவதை ஊக்குவிப்பதை இவ்வியக்கம் நோக்கமாகக் கொண்டதாகும். இவ்வியக்கம் அந்நாட்டில் தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளது [8] லாகூரில், நூர் ரகுமான் தாபாக்களில் பெண்களுடன் சேர்ந்து பேரணியைத் தொடர்ந்து வாராந்திர இருசக்கர வாகன சவாரிகளை ஏற்பாடு செய்தார்.

உருது மொழியில் 'ஒற்றுமையை' வெளிப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'பைச்சாரா' (உண்மையில் சகோதரத்துவம்). தாபாக்களுக்கு வரும் பெண்கள் சகோதரி என்ற பொருளில் அமைந்த 'பெகஞ்சரா' என்ற சொல்லை உருவாக்கினர். 'பைச்சாரா' என்று அச்சொல்லை மறுபெயரிடுவதன் மூலம், தாபாசுக்கு வந்த பெண்கள் ஒரு பரந்த பெண்ணிய ஒற்றுமையின் பார்வையை வெளிப்படுத்துவதையும், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவுப் பார்வையில் பாரம்பரிய பாலின உறவுகளை தீவிரமாக மறுபரிசீலனை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

பெகஞ்சாரா நாட்குறிப்புகள் தொகு

தாபாசில் பெண்கள் அமைப்பில் உறுப்பினர்களான சஃபி சாவும் செக்ரா நக்வியும் "பெகஞ்சாரா நாட்குறிப்புகள்" என்ற இணையம் மூலம் பரப்பப்படும் வலையொலிப்பரப்பு என்ற தொடரை நிறுவினர். போத்காசுட்ட்டு என்று பரவலாக அறியப்படும் இவ்வலையொலிப்பரப்புத் தொடர் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பெண்ணியம், இடைச்சந்திப்பு, பொதுவெளி இடங்களின் அரசியல் மற்றும் பலவற்றை ஆராய்கிறது. வலயொலிப்பரப்பு அமைப்பு தற்போது பாக்கித்தானின் மிகப்பெரிய இசை ஒலிபரப்பு சேவையான வழங்கி வருகிறது.[9]

அவுரத் அணிவகுப்பு தொகு

2018 ஆம் ஆண்டில் தாபாக்களில் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "அவுரத் அணிவகுப்பு " என்ற பெண்ணியப் பேரணியை ஒருங்கிணைக்க உதவினர். லாகூர் தாபாசில் பெண்கள், அமைப்பினர் பெண்ணிய ஆதரவாளர்களுடன் இணைந்து அவுரத் அணிவகுப்பை திட்டமிடுகின்றனர். கராச்சி நகர தாபாக்களில் பெண்கள் அமைப்பும் பெண்ணியவாதிகளும் இணைந்து கராச்சியில் தங்கள் தனிப்பட்ட திறன்களில் உதவியால் அவுரத் அணிவகுப்பை நடத்தினர். ஏனெனில் கராச்சிக் குழுவினர் அமைப்புக் குழு எந்த குழுக்களுடனும் இணைக்கப்படவில்லை.

திறனாய்வு தொகு

இருசக்கர வாகனத்தில் பெண்கள் இயக்கத்திற்குப் பின்னர் பெண்கள் பொது இடங்களுக்கு வருகை தரும் யோசனைக்கு எதிராக இருந்த சமூக ஊடக பயனர்களிடமிருது விமர்சனங்கள் வரத்தொடங்கின.[10]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Girls at Dhabas: challenging issues of safety, or 'respectability' in urban Pakistan?". openDemocracy.
  2. Editor, T. N. S. (13 September 2015). "Girls at Dhabas: A much-needed campaign". TNS - The News on Sunday. Archived from the original on 11 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2021. {{cite web}}: |last= has generic name (help); Check date values in: |access-date= (help)
  3. "Meet Sadia Khatri: Karachi's Chai Rebel". Daily Times. 12 October 2017.
  4. "Pakistani women use selfies to reclaim tea stalls". Women in the World. 10 February 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Khan, Themrise. "Women and a safe space". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  6. "BOWLED OVER | ePaper | DAWN.COM". https://epaper.dawn.com/DetailImage.php?StoryImage=25_08_2015_016_001. 
  7. Staff, Images (19 December 2018). "Like every other year, 2018 was the year of male rage". Images (in ஆங்கிலம்).
  8. "Global Voices - #GirlsOnBikes: Women Ride Bicycles To Reclaim Public Spaces in Pakistan" (in en). 12 April 2018. https://globalvoices.org/2018/04/12/girlsonbikes-women-ride-bicycles-to-reclaim-public-spaces-in-pakistan/. 
  9. "BehanChara Diaries". Patari (in ஆங்கிலம்).
  10. "Global Voices - #GirlsOnBikes: Women Ride Bicycles To Reclaim Public Spaces in Pakistan" (in en). Global Voices. 12 April 2018. https://globalvoices.org/2018/04/12/girlsonbikes-women-ride-bicycles-to-reclaim-public-spaces-in-pakistan/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாபாக்களில்_பெண்கள்&oldid=3930755" இலிருந்து மீள்விக்கப்பட்டது