பாக்கித்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பாக்கித்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women in Pakistan) என்பது குறிப்பாக நெருக்கமான இணையரின் வன்முறை, பாலியல் வன்முறை, ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனை, பெண்களின் மனித உரிமை மீறல் ஆகியவற்றில் அடங்கும்.[1] பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாக்கித்தானில் அமைந்துள்ள முழுப் பகுதியையும் எதிர்கொள்ளும் பிரச்சினையின் ஒரு பிரச்சனையாகும்.[2] 2019இல் வெளியிடப்பட்ட பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டில், பாக்கித்தான் 167 நாடுகளில் 164வது இடத்தில் உள்ளது. [3]
பாக்கித்தானில், 10.6 மில்லியன் சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், சுமார் 12.2 மில்லியன் சிறுமிகள், பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.[4] இந்த குறியீட்டின்படி, பாக்கித்தானின் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 20 சதவீத பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.[3]
2017 ஆம் ஆண்டில் 746 கௌரவக் கொலைகள், 24 அடுப்பு எரிப்பு, 18 தீர்வுத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[5] கைபர் பக்துன்க்வாவில் 2017இல் ஒரு மாற்று சர்ச்சை தீர்வு அமைப்பு வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டில், சிந்து மாகாணத்திற்கான குறைதீர்க்கும் 350 வழக்குகளில், வெறும் எட்டு வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் அலுவலகம் நிறுவப்பட்டதிலிருந்து மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் 116 புகார்களைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக 42 குற்றவாளிகள் எனவும், 15 பேர் விடுவிப்பும், 27 புகார் திரும்பப் பெறுதலும், 24 வழக்குகள் தொடர்ந்து நடந்ததும் இருந்தது. இது 13 முறையீடுகளையும் மதிப்பாய்வு செய்தது. [5]
இதில் நான்கு முடிவுகள் ஒதுக்கப்பட்டன. ஐந்து முடிவுகள் உறுதி செய்யப்பட்டன. இரண்டு வழக்குகள் காலம் கடந்ததாக அறிவிக்கப்பட்டன. இரண்டு வழக்குகள் தொடர்ந்தன. பாக்கித்தானில் பெண்கள் முக்கியமாக கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுவதன் மூலமும், பணியிட பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை , ஆணவக் கொலைகளால் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.[6] தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, பாக்கித்தானை 2018ஆம் ஆண்டில் பெண்களுக்கு உலகின் ஆறாவது ஆபத்தான நாடாக அறிவித்துள்ளது.[7]
வரலாறு
தொகுபாக்கித்தானில், குடும்ப வன்முறை ஒரு தனிப்பட்ட விஷயமாக கருதப்படுகிறது. ஏனெனில் இது குடும்பத்தில் நிகழ்கிறது. தீவிரமான கொலை அல்லது கொலை முயற்சியை எடுக்காதவரை, கணவன் -மனைவி துஷ்பிரயோகம் அரிதாகவே சமூக குற்றமாக கருதப்படுகிறது. வீட்டு வன்முறையின் பல்வேறு வடிவங்களில் உடல், மனம், உணர்ச்சி துஷ்பிரயோகம் ஆகியவை அடங்கும். 1969ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, நேர்காணலுக்கு வந்த பாக்கித்தான் பெண்களில் சுமார் 70 முதல் 90% பேர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவராக இருந்தனர்.[8]
வன்முறைச் செயல்கள்
தொகுபாக்கித்தானில் வன்முறைக்கு வறுமை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பாக்கித்தானில், ஒவ்வொரு மூன்றாவது பெண்களும் படிப்பறிவற்றவர்களாகவும், அதனால் 12 பேருக்கு தன்னுடைய உரிமைகள் பற்றி தெரியாமல் இருக்கின்றனர். கல்வியின் அதிகரித்த நிலை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் உரிமைகளுக்காகப் பேசவும், அவர்களின் நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரவும் உதவும். சில பழங்கால மரபுகளும், பழக்கவழக்கங்களும் இன்றும் பின்பற்றப்படுகின்றன. இதில் பரிமாற்ற திருமணங்கள், திருக்குர்ஆனுடன் திருமணம், கரோ காரி, ஆணவக் கொலை, வரதட்சணை ஆகியவை அடங்கும்.[9]
குடும்ப வன்முறை
தொகு2008 கணக்கெடுப்பில், பதிலளித்த 70% பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவித்ததாக தெரிவித்தனர்.[6] 2009 மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையின்படி, 70-90% பாக்கித்தான் பெண்கள் ஒருவித குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டனர். பாக்கித்தானில் ஆண்டுதோறும் சுமார் 5,000 பெண்கள் குடும்ப வன்முறையால் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் ஊனமுறுகிறார்கள். சட்ட அமலாக்க அதிகாரிகள் குடும்ப வன்முறையை ஒரு குற்றமாக கருதுவதில்லை. மேலும், பொதுவாக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Violence against women". www.who.int (in ஆங்கிலம்). WHO. பார்க்கப்பட்ட நாள் 12 October 2019.
- ↑ Iftikhar, Rukhsana (2019). "Break the Silence: Pakistani Women Facing Violence". Journal of Political Studies (36): 63.
- ↑ 3.0 3.1 The Women, Peace, and Security Index: A Global Index of Women's Wellbeing. doi:10.1163/2210-7975_hrd-0165-20180006. http://dx.doi.org/10.1163/2210-7975_hrd-0165-20180006. பார்த்த நாள்: 2020-12-06.
- ↑ Cheema, Ahmed Raza; Iqbal, Mazhar (2017-03-08). "Determinants of Girl's School Enrollment In Pakistan". Pakistan Journal of Gender Studies 14 (1): 17–35. doi:10.46568/pjgs.v14i1.138. பன்னாட்டுத் தர தொடர் எண்:2663-8886.
- ↑ 5.0 5.1 "Crimes against women in Pakistan". Policy Forum. 2019-12-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
- ↑ 6.0 6.1 Iftikhar, Rukhsana (2019). "Break the Silence: Pakistani Women Facing Violence". Journal of Political Studies (36): 63.Iftikhar, Rukhsana (2019). "Break the Silence: Pakistani Women Facing Violence". Journal of Political Studies (36): 63 – via Gale Academic OneFile.
- ↑ The world's most dangerous countries for women (2018) பரணிடப்பட்டது 2020-11-20 at the வந்தவழி இயந்திரம். Thompson Reuters Foundation. Retrieved March 14th, 2020
- ↑ Bibi, Seema; Ashfaq, Sanober; Shaikh, Farhana; Pir, Mohammad Ali (1969-12-31). "Prevalence, Instigating Factors and Help Seeking Behavior of Physical Domestic Violence Among Married Women of Hyderabad, Sindh". Pakistan Journal of Medical Sciences 30 (1): 122–5. doi:10.12669/pjms.301.4533. பன்னாட்டுத் தர தொடர் எண்:1681-715X. பப்மெட்:24639844.
- ↑ Niaz, Unaiza (2013), "Violence against Women in South Asia", Violence against Women and Mental Health, Key Issues in Mental Health, vol. 178, Basel: S. KARGER AG, pp. 38–53, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1159/000343696, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8055-9988-7, பார்க்கப்பட்ட நாள் 2020-12-06
- ↑ Zakar, Rubeena; Zakar, Muhammad; Mikolajczyk, Rafael; Kraemer, Alexander (2013). "Spousal Violence Against Women and Its Association With Women's Mental Health in Pakistan". Health Care for Women International 34 (9): 795–813. doi:10.1080/07399332.2013.794462. பப்மெட்:23790086. https://archive.org/details/sim_health-care-for-women-international_2013-09_34_9/page/795.