பாக்கித்தானில் பாலியல் வல்லுறவு

பாக்கித்தானில் பாலியல் வல்லுறவு (Rape in Pakistan) என்பது ஒரு குற்றச் செயலாகும். இதற்கு பாக்கித்தான் சட்டங்களின் கீழ் மரணதண்டனையோ அல்லது பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படும். குழு பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளுக்கு, மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும்.[1] பாக்கித்தானில் வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க டிஎன்ஏ சோதனையும், பிற அறிவியல் சான்றுகளும் பயன்படுத்தப்படுகின்றன.[2] [3] [4] [5]

பாக்கித்தானில் பாலியல் வல்லுறவு முக்தர் மா பீபியை அரசியல் ரீதியாக அனுமதித்த பிறகு சர்வதேச கவனத்திற்கு வந்தது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போர் (WAR) என்ற குழு பாக்கித்தானில் பாலியல் பலாத்காரத்தின் தீவிரத்தையும், காவல்துறையின் அலட்சியத்தையும் ஆவணப்படுத்தியுள்ளது. பெண்களைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் சகாலா ஹேரியின் கூற்றுப்படி, பாக்கித்தானில் பாலியல் பவல்லுறவு "பெரும்பாலும் நிறுவனமயமாக்கப்படுகிறது. மேலும், அமைதியும் சில நேரங்களில் அரசின் வெளிப்படையான ஒப்புதலும்" உள்ளது.[6]

மகளிர் உரிமை குழுவான மகளிர் செயல் மன்றத்தின் இணை நிறுவனரான மறைந்த வழக்கறிஞர் அஸ்மா ஜெகாங்கீரின் கூற்றுப்படி, பாக்கித்தானில் காவலில் உள்ள 72% பெண்கள் உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்படுகிறார்கள்.[7] மகளிர் செயல் மன்றத்தின் கூற்றுப்படி, பாலியல் வல்லுறவு செய்பவர்களில் 82%க்கும் அதிகமானோர் குடும்ப உறுப்பினர்களாக்வோ, தந்தையாகவோ, சகோதரர்களாகவோ, தாத்தாவாகவோ, பாதிக்கப்பட்டவர்களின் மாமாக்களாகவோ இருக்கின்றனர்.[8]

2019ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசு நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை நிறுவியது. பாக்கித்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டுமே இந்த சிறப்பு நீதிமன்றங்கள் கவனம் செலுத்தப் போகின்றன. சிறப்பு நீதிமன்றங்களை நிறுவியது பல மனித உரிமை அமைப்புகளால் பாராட்டப்பட்டது. [9]

வரலாறு தொகு

1979க்கு முன், பாக்கித்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375, பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுமிகள் சம்மதம் பெற்றிருந்தாலும் பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. [10]

1979ஆம் ஆண்டில், பாக்கித்தான் சட்டமன்றம் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வன்புணர்வு மற்றும் விபச்சார குற்றங்களை தடை செய்தது.[10] இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையாக சிறை செல்வதும், அபராதம், கல்லெறிதல் போன்ற தண்டனைகளாக மாற்றியது. [10] இந்தப் புதிய சட்டம் பெண்களைப் பாதுகாப்பதற்காகக் கூறப்பட்டிருந்தாலும், குற்றம் நடந்திருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பதையும் அது வலுப்படுத்துகிறது. [10]

2006 பெண்கள் பாதுகாப்புச் சட்டம் தொகு

15 நவம்பர் 2006 அன்று, பாக்கித்தானின் தேசிய சட்டசபை, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த 1979 ஹுதூத் கட்டளைச் சட்டங்களை திருத்தியது.[11] புதியச் சட்டத்திருத்தத்தின் படி, திருமணத்திற்கு புறம்பான பாலுறவுக்கான மரண தண்டனை என்பதும், வன்புணர்வு வழக்குகளை நிரூபிக்க பாதிக்கப்பட்ட நான்கு சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டிய தேவை நீக்கப்பட்டது. திருமணத்திற்கு வெளியே பாலுறவு கொண்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், கசையடியும் வழன்கப்படுவது நீக்கப்பட்டது. இருப்பினும், திருமணத்திற்கு வெளியே பாலுறவு கொள்வது இன்றும் ஐந்து வருட சிறைத்தண்டனை அல்லது 165 அமெரிக்க டாலர் அபராதத்துடன் குற்றவியல் குற்றமாக கருதப்படுகிறது.[12] பெண்கள் பாதுகாப்பு மசோதா வல்லுறவை விவரிக்கிறது:

2006 ஆம் ஆண்டு பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வண்புணர்ச்சிக்கான தண்டனை மரணம் அல்லது பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை சிறை விதிக்கலாம். பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளுக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம்.[13]

2000 ஆம் ஆண்டு முதல், பல்வேறு பெண்களும், விடலைப் பருவபெண்களும் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அதைப் பேசத் தொடங்கினர். ஒரு பெண் அமைதியாக கஷ்டப்பட வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு எதிராக, அவர்கள் செய்தி ஊடகங்களிலும், அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் கொடுத்தனர். பாக்கித்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை 2009 ஆம் ஆண்டில், பாக்கித்தானில் நடந்த சட்டவிரோத பெண் கொலைகளில் 46 சதவீதம் "ஆணவவக் கொலைகள்" என்று மதிப்பிட்டுள்ளது.

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Protection of Women (Criminal Laws Amendment) Act, 2006". pakistani.org. 1 December 2006.
  2. "Criminal Law (Amendment) (Offense of Rape) Act 2016". The Punjab Commission on Status of Women. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
  3. "Pakistan senate backs rape bill". http://news.bbc.co.uk/2/hi/south_asia/6178214.stm. பார்த்த நாள்: 2007-01-06. 
  4. "DNA test report of rape case accused matches". Pakistan Observer. 26 January 2020.
  5. "Zainab rape case: Prime suspect arrested in Pakistan's Punjab province". New Indian Express. 23 January 2018. Police have carried out DNA test of more than 1,000 suspects.
  6. "Lahore gets first women-only auto-rickshaw to beat 'male pests'". DAWN.COM (in ஆங்கிலம்). 2015-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  7. Goodwin, Jan (2002). Price of Honor: Muslim Women Lift the Veil of Silence on the Islamic World. Plume. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0452283770. https://books.google.com/books?id=ghjuAAAAMAAJ&q=Women%27s+Action+Forum. 
  8. "Over 82 Per Cent Of Rapists Are Fathers Or Brothers Of Victim: PTI MNA". https://nayadaur.tv/2020/09/over-82-per-cent-of-rapists-are-fathers-or-brothers-of-victim-pti-mna/. 
  9. "Pakistan to set up special courts to tackle violence against women". Reuters. 20 June 2019.
  10. 10.0 10.1 10.2 10.3 Noor, Azman bin Mohd (2012-07-15). "Prosecution of Rape in Islamic Law: A Review of Pakistan Hudood Ordinance 1979". IIUM Law Journal 16 (2). doi:10.31436/iiumlj.v16i2.55. பன்னாட்டுத் தர தொடர் எண்:2289-7852. 
  11. Noor, Azman bin Mohd (2012-07-15). "Prosecution of Rape in Islamic Law: A Review of Pakistan Hudood Ordinance 1979". IIUM Law Journal 16 (2). doi:10.31436/iiumlj.v16i2.55. பன்னாட்டுத் தர தொடர் எண்:2289-7852. 
  12. "Pakistan reforms its rape laws". East Bay Times. 16 November 2016.
  13. "Protection of Women (Criminal Laws Amendment) Act, 2006". pakistani.org. 1 December 2006."Protection of Women (Criminal Laws Amendment) Act, 2006". pakistani.org. 1 December 2006.