தாமரைக் கோபுரம்

இலங்கையின் கொழும்பில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் மற்றும் தென் ஆசியாவில் மிக உயரமான கோபுரம்

தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும்,[1] மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது.[2][3] இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது.[4] இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும்.[4] இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது.[5] தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது.[6] இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

தாமரைக் கோபுரம்
Lotus Tower
නෙළුම් කුළුණ
தாமரைக் கோபுரம் is located in Central Colombo
தாமரைக் கோபுரம்
மத்திய கொழும்பில் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டுமானப் பணியில்
வகைகலப்புப் பயன்பாடு:
  • தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள்
  • தொலைத்தொடர்பு நிலையங்கள்
  • மாநாட்டு மண்டபம்
  • திருமண வரவேற்பு மண்டபம்
  • உணவகங்கள், பார்வையாளர் மண்டபம்
இடம்கொழும்பு, இலங்கை
ஆள்கூற்று06°55′37″N 79°51′30″E / 6.92694°N 79.85833°E / 6.92694; 79.85833
நிறைவுற்றதுசெப்டம்பர் 16, 2019
உயரம்
அலைக்கம்ப கோபுரம்350 m (1,148.3 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை13
(அடித்தலத்தில் 6, பூவில் 7)
உயர்த்திகள்7
வலைதளம்
http://www.lotustower.lk/

ஏழாண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த தாமரைக் கோபுரம் 2019 செப்டம்பர் 16 ஆம் நாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.[7][8][9]

அமைவிடம்

தொகு

ஆரம்பத்தில் இக்கோபுரத்தை நிருவாகத் தலைநகர் கொழும்பின் புறநகர் ஒன்றில் அமைக்கவே திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டம் மாற்றப்பட்டு கொழும்பு நகர மத்தியில் பெய்ரா ஏரியை நோக்கிய பகுதியில் டி. ஆர். விஜயவர்தனா மாவத்தை வழியே தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டது.[10]

கட்டுமானப் பணி

தொகு

2012 சனவரி 3 ஆம் நாள் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டது.[11] 2012 சனவரி 20 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[10] 2014 திசம்பரில், கோபுரம் 125 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. 2015 சூலையில் 255 மீட்டர் உயரத்தை எட்டியது.

மேற்கோள்கள்

தொகு
  1. உயரமான தாமரை கோபுரம்: இலங்கை தலைநகர் கொழும்பில் திறந்துவைப்பு தி இந்து தமிழ் திசை-வியாழன், செப்டம்பர் 19 2019
  2. "Lotus Tower - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
  3. "Foundation stone laid for Lotus Tower". Archived from the original on 9 மார்ச்சு 2013. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்பிரவரி 2013.
  4. 4.0 4.1 "Symbolic landmark of Sri Lanka: Lotus Tower (Nelum Kuluna)". Sunday Observer (in ஆங்கிலம்). 2019-09-14. பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
  5. "Colombo to get 350 m high multifunctional communication tower soon". Sunday Times. Archived from the original on 16 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Sri Lankan version of Rs. 11bn Eiffel tower mooted". Asian Tribune News. Archived from the original on 19 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2010.
  7. இலங்கை தாமரை கோபுரம்: தெற்காசியாவின் உயரமான கோபுரம் திறந்து வைக்கப்பட்டது
  8. "China hails BRI progress - Global Times". www.globaltimes.cn. Archived from the original on 1 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  9. "Lotus Tower to bloom today - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-09-16. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  10. 10.0 10.1 Colombo Lotus Tower – Minister Basil Rajapakse Lays Foundation Stone பரணிடப்பட்டது 2013-04-26 at the வந்தவழி இயந்திரம், TRCSL Press. Retrieved 20 January 2012
  11. CEIEC Signed the Contract of Colombo Lotus Tower Project பரணிடப்பட்டது 2018-09-26 at the வந்தவழி இயந்திரம், CEIEC.com News. Retrieved 3 January 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைக்_கோபுரம்&oldid=3930759" இலிருந்து மீள்விக்கப்பட்டது