தாமிர-மக்னீசியம்

வேதிச் சேர்மம்

தாமிர-மக்னீசியம் (Copper - magnesium) என்பது MgCu2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரம் மற்றும் மக்னீசியம் தனிமங்கள் 2:1 என்ற விகிதத்தில் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. Fd3m என்ற இடக்குழுவில் a = 7.04 Å என்ற அணிக்கோவை அளவுருவுடன் கனசதுரப் படிகவடிவமாக தாமிர-மக்னீசியம் உலோகங்களிடைச் சேர்மமாக உருவாகிறது.[2]

தாமிர-மக்னீசியம்

The crystal structure of MgCu2. Magnesium is shown in green, copper in brown.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம் - மக்னீசியம் (2:1)
வேறு பெயர்கள்
Cu2Mg
இனங்காட்டிகள்
12054-17-0 Y
ChemSpider 57534863
InChI
  • InChI=1S/2Cu.Mg
    Key: BSBUOWMDDLTWGL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71355210
  • [Mg].[Cu].[Cu]
பண்புகள்
Cu2Mg
வாய்ப்பாட்டு எடை 151.40 g·mol−1
உருகுநிலை 520 °செல்சியசு[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

உயர் வெப்பநிலைகளில் Mg2Cu கலப்புலோகத் தூள் அல்லது மக்னீசியம் ஐதரைடுடன் உலோகநிலை தாமிரத்தைச் சேர்த்து ஐதரசனேற்ற வினைக்கு உட்படுத்தினால் தாமிர-மக்னீசியம் உருவாகிறது:[3]

2 Mg2Cu + 3 H2 → 3 MgH2 + MgCu2
MgH2 + 2 Cu → MgCu2 + H2

அதிகப்படியான தாமிரத்தின் முன்னிலையில் சுமார் 380 ° செல்சியசு வெப்பநிலையில் விகிதவியல் அளவுகளில் இரண்டு உலோகங்களையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தும் தாமிர-மக்னீசியம் தயாரிக்கலாம்.[4]

பண்புகள்

தொகு

போரான் அல்லது அதன் ஆக்சைடுடன் தாமிர-மக்னீசியம் வினைபுரிந்து மக்னீசியம் போரைடுகளை உருவாக்குகிறது.[5] மக்னீசியம் ஐதரைடுடன் வினைபுரிந்து செஞ்சாய்சதுர Mg2Cu சேர்மமாக உருவாகி ஐதரசனை விடுவிக்கிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Chen, W.; Sun, J. (2006). "The electronic structure and mechanical properties of MgCu2 Laves phase compound". Physica B: Condensed Matter 382 (1–2): 279–284. doi:10.1016/j.physb.2006.02.031. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-4526. Bibcode: 2006PhyB..382..279C. 
  2. Ganeshan, S.; Shang, S.L.; Zhang, H.; Wang, Y.; Mantina, M.; Liu, Z.K. (2009). "Elastic constants of binary Mg compounds from first-principles calculations". Intermetallics 17 (5): 313–318. doi:10.1016/j.intermet.2008.11.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0966-9795. 
  3. Shibata, Kazuya; Tanaka, Koji; Kurumatani, Kosuke; Nishida, Yasuki; Takeshita, Hiroyuki T. (2013). "Thermodynamic Evaluation for Formation of MgCu2from MgH2and Cu". Thermodynamic Evaluation for Formation of MgCu2 from MgH2 and Cu. pp. 221–226. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781118792148.ch28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118792148.
  4. Arcot, Binny; Cabral, C.; Harper, J. M. E.; Murarka, S. P. (2011). "Intermetallic Reactions Between Copper and Magnesium as an Adhesion / Barrier Layer". MRS Proceedings 225. doi:10.1557/PROC-225-231. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-9172. 
  5. Birol, Yucel (2013). "Response to Thermal Exposure of Ball-Milled Cu-Mg/B2O3 Powder Blends". Metallurgical and Materials Transactions B 44 (4): 969–973. doi:10.1007/s11663-013-9860-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1073-5615. Bibcode: 2013MMTB...44..969B. 
  6. Volkova, L. S.; Kalinnikov, G. V.; Ivanov, A. V.; Shilkin, S. P. (2012). "Synthesis of Mg2Cu and MgCu2 nanoparticles in a KCl-NaCl-MgCl2 melt". Inorganic Materials 48 (11): 1078–1081. doi:10.1134/S0020168512110179. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1685. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர-மக்னீசியம்&oldid=3901657" இலிருந்து மீள்விக்கப்பட்டது