தாமிர சிலிசைடு

வேதிச் சேர்மம்

தாமிர சிலிசைடு (Copper silicide) என்பது Cu5Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஐந்தாமிர சிலிசைடு என்றும் அழைக்கப்படுகிறது. தாமிர சிலிசைடானது சிலிக்கானுடன் தாமிரம் இணைந்து உருவாகும் ஓர் ஈரிணைச் சேர்மமாகும். மேலும் இதுவொரு இடையுலோகச் சேர்மமாகவும் இருக்கிறது. அதாவது ஓர் அயனச் சேர்மம் மற்றும் ஓர் உலோகக் கலவை இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகளைக் கொண்டிருக்கிறது. நீரில் கரையாத இப்படிகத் திண்மம் வெள்ளியைப் போலக் காணப்படுகிறது. தாமிரத்தையும் சிலிக்கானையும் சேர்த்து சூடாக்குவதால் தாமிர சிலிசைடு தோன்றுகிறது.

தாமிர சிலிசைடு
இனங்காட்டிகள்
12159-07-8 Y
பப்கெம் 6336988
பண்புகள்
Cu5Si
வாய்ப்பாட்டு எடை 345.8155 கி/மோல்
தோற்றம் வெள்ளி போன்ற தூள்
உருகுநிலை 825 °C (1,517 °F; 1,098 K)
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (தமிரமாக)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (தாமிரமாக)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பயன்கள் தொகு

தாமிரம் அடிப்படையிலான சில்லுகளை வினைமுடக்க தாமிர சிலிசைடின் மெல்லிய அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு இச்சேர்மம், விரவல் தடுப்பி, மின்னிடப்பெயர்ச்சி மற்றும் விரவல் சுருக்கியாகச்[2] செயலாற்றுகிறது.

கரிம சிலிக்கான் தயாரிக்க உதவும் தொழிற்சாலை முறை உற்பத்தியான நேரடிச் செயல்முறையில் தாமிர சிலிசைடு தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில், தாமிர சிலிசைடு , சிலிக்கானுடன் மெத்தில் குளோரைடு சேரும் வினைக்கு வினையூக்கியாகச் செயல்படுகிறது. தொழில்முறையில் நிகழும் இவ்வினை உபயோகமுள்ள இருமெத்தில் இருகுளோரோசிலேனைத்:[3] தருகிறது.

2 CH3Cl + Si → (CH3)2SiCl2

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_சிலிசைடு&oldid=3557691" இலிருந்து மீள்விக்கப்பட்டது