தாமோதரசேனன்

வாகாடக மன்னன்

தாமோதரசேனன் ( Damodarasena) (ஆட்சி சுமார் 410 – 420 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் நந்திவர்தன-பிரவரபுர கிளையின் ஆட்சியாளராவார். இவர் இரண்டாம் உருத்ரசேனருக்கும் குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தரின் மகள் பிரபாவதிகுப்தாவிற்கும் மகனாவார். இவரது தந்தையின் அகால மரணத்தின் போது இவரும் இவரது சகோதரர்களான திவாகரசேனனும், பிரவரசேனனும் உரிய வயதினராக இல்லாமல் இருந்ததால், இவர்களது தாயார் பிரபாவதிகுப்தா நீண்ட காலத்திற்கு ஆட்சியாளராக ஆட்சி செய்தார். பட்டத்து இளவரசரான திவாகரசேனன், அரியணை ஏறுவதற்கு முன்பே இறந்துவிட்டார். அதனால் தாமோதரசேனனும் அவனுடைய சகோதரன் இரண்டாம் பிரவரசேனனும்தான் வாகடக அரசர்களாக ஆனார்கள். [2] தாமோதரசேனாவின் ஆட்சியின் ஒரு பகுதியின் போது பிரபாவதிகுப்தா தொடர்ந்து ஆட்சியாளராக செயல்பட்டிருக்கலாம். [3]

தாமோதரசேனன்
மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 410 - 420 பொ.ச.
முன்னையவர்பிரபாவதிகுப்தா (திவாகரசேனனின் ஆட்சிப் பிரதிநிதி)
பின்னையவர்இரண்டாம் பிரவசேனன்
மரபுவாகாடகப் பேரரசு
தந்தைஇரண்டாம் ருத்திரசேனர்
தாய்பிரபாவதிகுப்தா

கடந்த காலங்களில், தாமோதரசேனனின் வாகாடக ஆட்சியாளரின் நிலை சர்ச்சைக்கு உட்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வி.வி.மிராஷி மற்றும் ஏ.எஸ். அல்டேகர் உட்பட சில குறிப்பிடப்பட்ட வரலாற்றாசிரியர்கள் தாமோதரசேனனும் இரண்டாம் பிரவரசேனனும் உண்மையில் ஒரே நபர் என்று நினைத்தனர். "பிரவரசேனன்" என்பது வெறுமனே தாமோதரசேனன் அரியணையில் ஏறிய பிறகு பெற்ற முடிசூட்டுப் பெயராகும். [4] [5] இருப்பினும், 1982 இல் கண்டுபிடிக்கப்பட்ட மீரேகான் முத்திரை கல்வெட்டு, பிரபாவதிகுப்தாவை "இரண்டு மன்னர்களின் தாய்" (அதாவது தாமோதரசேனன் மற்றும் இரண்டாம் பிரவரசேனன் ) என்கிறது. இறுதியாக இரண்டு நபர்களும் உண்மையில் வேறுபட்டவர்கள் என்பதை கல்வெட்டு நிறுவுகிறது. [6]

சான்றுகள் தொகு

  1. Shastri, Ajay Mitra (1997). Vakatakas: Sources and History. Aryan Books International. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173051234. 
  2. Singh, Upinder (2009). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1677-9. 
  3. Shastri (1997), p. 183
  4. Mirashi, V.V. (1963). The Inscriptions of the Vakatakas. Government Epigraphist for India. பக். 35. https://archive.org/details/dli.ernet.107898/page/35/mode/1up. 
  5. A.S. Altekar (2007). The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. பக். 104. 
  6. Shastri (1997), pp. 92, 183
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமோதரசேனன்&oldid=3405857" இலிருந்து மீள்விக்கப்பட்டது