தாரா கோவிந்த் சப்ரே
தாரா கோவிந்த் சப்ரே (Tara Govind Sapre)(1919-1981) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிராவினை சேர்ந்தவரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் நான்காவது மக்களவையில் வடகிழக்கு மும்பை மக்களவை தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஆர். பி. கோவிந்த் ரகுநாத் பார்வேயின் மகளாக, தாரா பம்பாய் மாகாணம் புனேயில் 9 மே 1919-ல் பிறந்தார். இவர்பெர்குசன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]
பணி
தொகுதாரா அகில இந்திய மகளிர் மாநாட்டில் உறுப்பினராக இருந்தார்.[1] இந்தியத் தேசிய காங்கிரசின் அரசியல்வாதியும் பம்பாய் வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான தனது சகோதரர் எஸ். ஜி.பார்வேக்காகவும் இவர் பிரச்சாரம் செய்தார். 1967-ல் பார்வேயின் திடீர் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தாரா போட்டியிட்டார். அதே நேரத்தில் முந்தைய தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த வி. கே. கிருஷ்ண மேனன் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.[2] இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், "வெளிமாநிலத்தவர்" என்பதற்காக சிவசேனா இவரது தேர்வை கடுமையாக எதிர்த்தது.[3] இத்தேர்தலில் சப்ரே 156,313 வாக்குகளைப் பெற்று, நான்காவது மக்களவை உறுப்பினரானார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதாரா 25 மே 1940-ல் கோவிந்த் விட்டல் சப்ரேவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.[1] தாரா புனேவில் மாரடைப்பு காரணமாக 1981 ஜனவரி 14 அன்று இறந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Members Bioprofile: Sapre, Shrimati Tara Govind". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Varma, Shanti Prasad; Narain, Iqbal; Bhambhri, Chandra Prakash (1968). Fourth general election in India. Vol. 1. Orient Longmans. p. 538.
- ↑ Shenoy, T V R (18 July 2012). "Pranabda and the burden of two past Presidents". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ "Details of Bye Elections from 1952 to 1995" (XLXS). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1981. p. 28.