தாரை வானூர்திப் பின்தங்கல்

தாரை வானூர்திப் பின்தங்கல் (Jet lag), மருத்துவத்தில் ஒத்தியங்காக் கேடு (desynchronosis) எனப்படுவது, தாரை வானூர்தியில் கிழக்கு மேற்காகவோ மேற்கு கிழக்காகவோ குறைந்த காலவெளியில் வெகுதொலைவு பயணிப்பதால் உடலின் நாளிடை இசைவில் உண்டாகும் மாற்றங்களால் ஏற்படும் உடலியங்கியல் கோளாறாகும். இது நாளிடை இசைவு தூக்கக் கோளாறுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

தாரை வானூர்திப் பின்தங்கல்
Jet lag
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநரம்பியல்
ஐ.சி.டி.-10G47.2
ஐ.சி.டி.-9307.45, 780.50 327.35
ம.பா.தD021081

தாரை வானூர்திப் பின்தங்கல் நோய்குறிகள் புதிய நேர வலயத்திற்கு முழுமையாக மாறும்வரை பல நாட்களுக்குத் தொடரலாம். மருத்துவ அறிவுரைகளின்படி இதனிலிருந்து விடுபட ஒருவர் கடக்கும் ஒவ்வொரு நேர வலயத்திற்கும் ஒருநாள் எடுக்கலாம். முகனையாக வானூர்தி ஓட்டுனர்கள், வானூர்தி சேவைப்பணியாளர்கள், அடிக்கடி பயணிப்போருக்கு இந்த நோய்க்கூட்டறிகுறி ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் ஓட்டுனர் களைப்பைக் கருத்தில் கொண்டு வான்வழிச்சேவை நிறுவனங்கள் அவர்களுக்கு பணி வழங்குதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன.

தாரை வானூர்திகள் வந்தபின்னரே இதன் மூலகாரணமான வெகுதொலைவு பயணங்களும் விரைவான பயணங்களும் ஏற்பட்டதால் இந்தக் கூட்டறிகுறி பொதுவாக தாரைவானூர்தி பினதங்கல் என அழைக்கப்படலாயிற்று. முந்தைய சுற்றியக்கி வானூர்திகள் மெதுவாக இருந்தமையாலும் வெகுதொலைவிற்கு செல்லும் திறன் இல்லாதிருந்ததாலும் அக்காலத்தில் இந்த நோய்க்கூட்டறிகுறிகள் அறியப்படாதிருந்தன. அதனிலும் பண்டைக் காலங்களில் கப்பல்களில் பயணங்கள் மாதக்கணக்கில் இருந்தமையால் உடலின் நாளிடை இசைவும் பயணத்துடன் இணைந்து மாறியது.

அறிகுறிகள்

தொகு

தாரை வானூர்திப் பின்தங்கலின் அறிகுறிகள் பல்வேறாக உள்ளன. இது எவ்வளவு நேர வலய மாற்றம் நிகழ்ந்துள்ளது, நாளின் நேரம் என்பவற்றையும் தனிநபர் இயல்புகளைப் பொறுத்தும் மாறுபடும். அவற்றில் சில பின்வருமாறு:[1]

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. Cunha, John P.; Stöppler, Melissa Conrad. Jet Lag. http://www.medicinenet.com/jet_lag/article.htm. 

வெளி இணைப்புகள்

தொகு