தாலப்பொலி
தாலப்பொலி (Thalappoli, மலையாளம்: താലപ്പൊലി) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஒரு சபதமாகச் செய்யப்படும் ஒரு சடங்கு விழா ஆகும். மணமக்களைத் திருமண மண்டபத்திற்கும், சிறப்பு விருந்தினர்களை பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்லவும் இது செய்யப்படுகிறது.
சடங்கு
தொகுதாலப்பொலி என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஒரு சபதமாகச் செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும். குளித்து, அழகான பாரம்பரிய உடைகள் மற்றும் கேரள ஆபரணங்கள் அணிந்து, பெண்கள், முக்கியமாக இளம் பெண்கள், புதிய நெல், பூக்கள், அரிசி, தேங்காய் (பொதுவாக இரண்டு துண்டுகளாக உடைக்கப்படுவது) நிரப்பப்பட்ட தாலத்தை (தாம்பாளம்-உலோகத் தகடு) கையில் ஏந்தியபடி வரிசையில் நிற்பார்கள். தீபம் ஏற்றி, குரவத்துடன் (ஒலியின் பாரம்பரிய வடிவம்), முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களை இசைத்து கோயிலைச் சுற்றி வருவார்கள்.[1][2] இது பகவதி (பத்திரகாளி) கோவில்களில் வழக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.[3]
கேரளா முழுவதும் உள்ள பல இந்து கோவில்களில் தாலப்பொலி விழா கொண்டாடப்படுகிறது. கொடுங்கல்லூர் பகவதி கோயில்,[4] பட்டுப்புரக்கல் பகவதி கோயில்,[5] செங்கன்னூர் மகாதேவர் கோயில்,[6] ஆற்றுக்கால் பகவதி கோயிலில் கன்னிப் பெண்களால் நடத்தப்படும் தாலப்பொலி முக்கியமான விழாவாகும்.[7] குருவாயூர் கோயிலில் குழந்தைகளால் பில்லேரு தாலப்பொலி நடத்தப்படுகிறது.[8] சவறை கொட்டாங்குளங்கரா தேவி கோயிலில் ஆண்கள் பெண் வேடமணிந்து தாலப்பொலி செய்யும் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.[9]
தோற்றம்
தொகுகேரள இந்து கலாச்சாரத்தில், அஷ்ட மாங்கல்யங்கள் (எட்டு ஆசீர்வதிக்கப்பட்ட கூறுகள்) - ஒரு கண்ணாடி, ஒரு விளக்கு, தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம், ஒரு புதிய ஆடை, அக்சதம் (அரிசி மற்றும் நெல் கலவை), தங்கம், ஒரு பெண் பார்ப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதனுடன் குலவை ஒலியிடலும் மகிழ்ச்சியைக் குறிக்கின்றது.[10] இதன் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம் தாலப்பொலியாக மாறியதாக நம்பப்படுகிறது.[10]
'தாலப்பொலி' கேரளாவில் பௌத்தம் மற்றும் சமணத்துடன் தொடர்புடையது என்று மற்றொரு வாதமும் உள்ளது.
சடங்கு அல்லாதது
தொகுஇப்போது மணமக்களைத் திருமண மண்டபத்திற்கும், சிறப்பு விருந்தினர்களை பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்ல தாலப்போலியும் நடத்தப்படுகிறது.[10]
விமர்சனங்கள்
தொகுபெண்கள் வெயிலில் மணிக்கணக்கில் நிற்பது, இரவு நேரங்களில் கூட அமைச்சர்கள் மற்றும் அரசு விருந்தினர்களுக்காகக் காத்திருப்பது பல்வேறு வகையில் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கேரளாவில் அமைச்சர்களைப் பெண்கள் தாலாட்டுப் போடுவதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.[11] இதேபோல், 2022-இல், பள்ளிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை வரவேற்க, மாணவர்களை தாலப்பொலியாக வரிசையாக நிறுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கேரள கல்வி அமைச்சர் வா. சிவன்குட்டி அழைப்பு விடுத்துள்ளார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "താലപ്പൊലി". Archived from the original on 2023-02-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
- ↑ "Thalappoli – Traditions Of Kerala". Organikos (in ஆங்கிலம்). 14 June 2013. Archived from the original on 24 February 2023. பார்க்கப்பட்ட நாள் 24 February 2023.
- ↑ Balasubramanian (2015-08-19). Kerala ~ The Divine Destination.
- ↑ "കൊടുങ്ങല്ലൂർ താലപ്പൊലി: ആനപ്പന്തലിന് കാൽനാട്ടി" (in ml). https://www.deshabhimani.com/news/kerala/news-thrissurkerala-04-01-2023/1065292.
- ↑ "പാട്ടുപുരയ്ക്കൽ താലപ്പൊലി മഹോത്സവം" (in ml). https://keralakaumudi.com/news/news.php?id=454797&u=local-news-ernakulam.
- ↑ "ഭക്തിയുടെ നിറവിൽ ചെങ്ങന്നൂർ ദേവിക്ക് തൃപ്പൂത്താറാട്ട്" (in ml). https://keralakaumudi.com/news/news.php?id=894782&u=local-news-pathanamthitta.
- ↑ "ദേവിയുടെ ഭടന്മാരെ അനുസ്മരിക്കാന് ശൂലം കുത്തല്..വിചിത്രമായ ആചാരങ്ങളുള്ള സ്ത്രീ ശബരിമല". Archived from the original on 2023-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
- ↑ "ഗുരുവായൂരിൽ പിള്ളേര് താലപ്പൊലി നാളെ, ക്ഷേത്രം നേരത്തെ അടയ്ക്കും" (in ml). https://www.manoramaonline.com/district-news/thrissur/2023/01/04/thrissur-guruvayur-pilleru-thalappoli-.html.
- ↑ "Culture & Heritage | District Kollam, Government of Kerala | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-02-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
- ↑ 10.0 10.1 10.2 Haridas, Harikrishnan (26 September 2019). "താലപ്പൊലിയെടുക്കല്". Kesari Weekly. Kesari. Archived from the original on 24 February 2023. பார்க்கப்பட்ட நாள் 24 February 2023.
- ↑ "മന്ത്രിമാരെ സ്വീകരിക്കാൻ താലപ്പൊലി നിരോധിച്ചു- മന്ത്രിസഭാ തീരുമാനം, താലപ്പൊലി പീഢനത്തിൽ നിന്നും സ്ത്രീകൾക്ക് മോചനം". Pravasishabdam. 26 May 2016. Archived from the original on 24 February 2023. பார்க்கப்பட்ட நாள் 24 February 2023.
- ↑ "Don't use students for 'thalappoli' reception: Minister". 2022-01-09 இம் மூலத்தில் இருந்து 2023-02-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230224135229/https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/dont-use-students-for-thalappoli-reception-minister/articleshow/88783469.cms.