பட்டுப்புரக்கல் பகவதி கோயில்

பட்டுப்புரக்கல் பகவதி கோயில் கேரளாவின் கோட்டயம், ஞீழூர் கிராமத்தில் அமைந்துள்ள பத்ரகாளி கோயிலாகும். இக்கிராமத்தில் உள்ள ஒரே கோயில் இதுவாகும். இக்கோயில் கட்டம்பாக் கிழக்கும் பாகம் பட்டுபுரக்கல் பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். [1]

கோயிலின் நுழைவு வளைவு

அமைவிடம்

தொகு

குறவிலங்காடு, கடுதுருத்தி ஆகியவை அருகிலுள்ள நகரங்களாகும். இக்கோயில் இவ்விடங்களிலிருந்து முறையே 6 கி.மீ, 11 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன. இக்கோயிலின் சீரமைப்புப்பணிகள் கடைசியாக 2016 மார்ச் 19இல் க்ஷேத்ர தந்திரி பிரம்மா ஸ்ரீ அணில் திவாகரன் நம்பூதிரி முன்னிலையில் நடத்தப்பெற்றன. இக்கோயில் NSS கரயோகம் எண்.336ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

மூலவர்

தொகு

பத்ரகாளி சிவபெருமானின் மகளாகக் கருதப்படுகிறாள் என்ற இந்து புராணத்தின் அடிப்படையில் இங்கு பத்ரகாளி மூலவராக உள்ளார். யட்சி, பகவதி ஆகிய துணைத்தெய்வங்களும் இங்கு உள்ளனர்.

திருவிழாக்கள்

தொகு

இக்கோயிலன் வருடாந்திர திருவிழா ஒவ்வொரு மலையாள மாதமான மீனத்திலும் பொங்கலுடன் தொடங்கி 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வருடாந்திர விழாவுடன் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருவிழா சிறப்பானதாகும். நிறைவு நாளில் முடியேட்டு விழாவும், திருவிழா முடிந்து ஒரு நாள் இரவில் வலிய குருதி பூஜையும் நநடத்தப்பெறுகின்றன. நவராத்திரியின் நிறைவு நாளில் வித்தியாரம்பம், விநாயக சதுர்த்தி அன்று அஷ்டத்ரவ்ய மகாகணபதி ஹோமம், தீபாவளியன்று கோயிலின் உள்ளேயும் சுற்றிலும் தீபம் ஏற்றல், ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலை சர்வைஸ்வர்ய பூஜை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அகண்டநாமஜபம் என்ற வகையில் பிற விழாக்கள், பூசைகள் நிகழ்த்தப்பெறுகின்றன.ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாரங்கா விளக்கு எனப்படும் எலுமிச்சை விளக்கும், நெய்விளக்கும் வழங்குவது இக்கோயிலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Chottanikkara Bhagavathy Temple | Ernakulam | Kerala Temples (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-06-14

படத்தொகுப்பு

தொகு