தாலியம்(I) சல்பைடு

வேதிச் சேர்மம்

தாலியம்(I) சல்பைடு (Thallium(I) sulfide) Tl2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] அமெரிக்க வேதியியலாளரான தியோடர் கேசு உருவாக்கிய ஆரம்பகால சில ஒளி-மின்சாரக் கண்டுபிடிப்பான்களில் இது பயன்படுத்தப்பட்டது. இவரே ஆரம்பகால திரைப்பட வீழ்த்திகளில் பயன்படுத்தப்பட்ட தாலோபைட்டு மின்கலன்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கண்டுபிடிப்பான்கள் தாலியம், ஆக்சிசன் மற்றும் கந்தகம் ஆகியவற்றைக் கொண்டிருந்ததாக தியோடர் கேசு விவரித்தார். வேறு சிலர் இதை தாலியம் ஆக்சிசல்பைடு என்று தவறாக விவரித்தனர். தற்செயலாக அப்போது இது அறியப்படாத ஒரு சேர்மமாகும். கேசின் விளக்கத்தைத் தொடர்ந்து பின்னர் தாலியம்(I) சல்பைடு படலத்தின் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்சிசனேற்றம் செல்லின் செயல்பாட்டிற்கு முக்கியமானது என்பதை ஆர்.ஜே. கேசுமேன் உணர்ந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட நீண்ட அலை அகச்சிவப்பு கண்டுபிடிப்பான் வளர்ச்சியில் கேசுமேனின் பணி முடிவடைந்தது.[2] இதே நேரத்தில் செருமனியிலும் நம்பகமான தாலியம்(I) சல்பைடு கண்டுபிடிப்பான்கள் உருவாக்கப்பட்டன.[3]

தாலியம்(I) சல்பைடு
Unit cell of thallium sulfide under standard conditions. The yellow atoms represent the sulfur anions.
தாலியம்(I) சல்பைடின் அலகு செல்.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(I) சல்பைடு
வேறு பெயர்கள்
தாலசு சல்பைடு
இனங்காட்டிகள்
1314-97-2 Y
ChemSpider 140161 Y
EC number 215-250-8
InChI
  • InChI=1S/S.2Tl/q-2;2*+1 Y
    Key: BXJGLLKRUQQYTC-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16683485
  • S([Tl])[Tl]
UNII W63QXT8PYG Y
பண்புகள்
Tl2S
வாய்ப்பாட்டு எடை 440.833 கி/மோல்
தோற்றம் கருப்பு நிற படிகத் திண்மம்
அடர்த்தி 8.390 கி/செ.மீ3
உருகுநிலை 448 °C (838 °F; 721 K)
கொதிநிலை 1,367 °C (2,493 °F; 1,640 K)
−88.8·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம், hR81
புறவெளித் தொகுதி R3, எண். 146
Lattice constant a = 12.150(2) Å, c = 18.190(4) Å
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

தாலியம்(I) சல்பைடு இயற்கையில் கார்லினைட்டு என்ற கனிமமாக காணப்படுகிறது. குறைந்த பட்சம் இரண்டு உலோகங்கள் இல்லாத தாலியத்தின் ஒரே சல்பைட்டு தாது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. Tl2S சிதைவடைந்த எதிர் -CdI2 கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[4]

தயாரிப்பு

தொகு

பகுதிக்கூறான தனிமங்களிலிருந்து தாலியம்(I) சல்பைடை தயாரிக்கலாம். தாலியம்(I) சல்பேட்டு அல்லது தாலியம்(I) நைட்ரேடு கரைசல்களிலிருந்தும் தாலியம்(I) சல்பைடை வீழ்படிவாக்கலாம். மெல்லிய படலங்கள் டெபாசிட் செய்யப்பட்டு, சிட்ராட்டோதாலியம் அணைவுச் சேர்மம் மற்றும் தயோயூரியா ஆகியவற்றின் கலவையிலிருந்து தாலியம்(I) சல்பைடின் மெல்லிய படலங்கள் தயாரிக்கப்பட்டன. இப்படலங்களை 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் நைட்ரசன் சூழலில் சூடாக்குவது அனைத்து தயாரிப்பும் Tl2S ஆக மாற்றும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. T. W. Case (1920). "Thalofide Cell"—a New Photo-Electric Substance". Phys. Rev. 15 (4): 289. doi:10.1103/PhysRev.15.289. Bibcode: 1920PhRv...15..289C. https://archive.org/details/sim_physical-review_1920-04_15_4/page/289. 
  2. D. J. Lovell (1971). "Cashman thallous sulfide cell". Appl. Opt. 10 (5): 1003–8. doi:10.1364/AO.10.001003. பப்மெட்:20094592. Bibcode: 1971ApOpt..10.1003L. 
  3. American patent 2448517, filed 1944, granted 1948
  4. Giester, G.; Lengauer, C. L.; Tillmanns, E.; Zemann, J. (2002). "Tl2S: Re-Determination of Crystal Structure and Stereochemical Discussion". Journal of Solid State Chemistry 168 (1): 322. doi:10.1006/jssc.2002.9711. Bibcode: 2002JSSCh.168..322G. 
  5. V. Estrella, M. T. S. Nair and P. K. Nair (2002). "Crystalline structure of chemically deposited thallium sulfide thin films". Thin Solid Films 414 (2): 281. doi:10.1016/S0040-6090(02)00500-X. Bibcode: 2002TSF...414..281E. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_சல்பைடு&oldid=3796749" இலிருந்து மீள்விக்கப்பட்டது