தாவரங்களின் தோட்டம்

தாவரங்களின் தோட்டம், பிரான்சு (பிரெஞ்சு மொழி: Jardin des plantes அல்லது Jardin des plantes de Paris (பிரெஞ்சு மொழி: [ʒaʁdɛ̃ dɛ plɑ̃t də paʁi])) என்பது பிரான்சு நாட்டின் பாரிசு நகரிலுள்ள தாவரவியல் பூங்கா ஆகும். இந்நாட்டின் மிக முக்கிய தாவரவியல் பூங்கா இதுவாகும். பிரான்சு அரசு அறிவித்த Jardin des plantes என்ற பெயரே தற்போதுள்ளது. இப்பூங்காவினுள், ஆவணகங்கள், நூலகங்கள், பசுமைக் குடில்கள், விலங்குகள் சாலை, பிரான்சு நாட்டின் தாவரயினங்களின் சேகரங்கள் போன்ற முக்கியத் துறைகளுக்கு, முறைப்படியான கட்டிடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. இதன் நில அளவு, 24 மார்ச்சு 1993 முதல், 28 எக்டேர் (280,000 m2) ஆகும்.[2] இத்தாவரியில் கட்டிடத்திற்கு முன்னே, 1601 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த "Robinier Faux Acacia" மரம் இருக்கிறது. இத்தாவரவியல் காட்சியகம், 1930–35 ஆம் ஆண்டு இராக்பெல்லர் அறக்கட்டளை (Rockefeller Foundation) கொடையால் உருவாக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் தரைத்தளம், பொது மக்களுக்காக, குறைந்த காலத்திற்கு மட்டும் செயற்படும் கண்காட்சி தளமாகப் பயன்படுகிறது. அதாவது அவ்வப்போது இதன் 'கண்காட்சி கரு' மாறி கொண்டே இருக்கும்.

தாவரங்களின் தோட்டம்
Jardin des plantes
Grande galerie de l'Évolution, ஓவியம்.
(படிவளர்ச்சிக் கொள்கை காட்சியகம்)
ஓவியர்:Louis-Jules André, 1889
தாவரங்களின் தோட்டம் is located in Paris
தாவரங்களின் தோட்டம்
பாரிசு நகரில் இருப்பிடம்
நிறுவப்பட்டது1635 (1635)
அமைவிடம்பாரிசு, பிரான்சு
ஆள்கூற்று48°50′38″N 2°21′35″E / 48.84396°N 2.35960°E / 48.84396; 2.35960
வகைதாவரவியல் பூங்கா
வருனர்களின் எண்ணிக்கை1,586,450[1]
பொது போக்குவரத்து அணுகல்Jussieu
Austerlitz

இங்குள்ள பிரான்சு நாட்டு உலர் தாவரகம் (Herbier National), உலகிலேயே அதிக அளவு உலர் தாவரக ஆவணங்களைப் பெற்று பராமரித்து வருகிறது. இந்த ஆவணங்களின் எண்ணிக்கை, 7.5 மில்லியன் ஆகும்.[3][4][5]

தாவரவியல் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tourism in Paris: Key Figures 2016". Paris Visitors and Convention Bureau. p. 19. Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  2. வார்ப்புரு:Base Mérimée
  3. Deligeorges, Gady, Labalette, "Le Jardin des Plantes et le Museum National d'Histoire Naturelle" (2004), pp. 44–45
  4. https://www.unco.edu/nhs/biology/research/herbarium/
  5. https://botany.one/2018/03/the-national-museum-of-natural-history-in-paris-one-of-the-largest-herbaria-in-the-world/

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jardin des plantes de Paris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரங்களின்_தோட்டம்&oldid=3922852" இலிருந்து மீள்விக்கப்பட்டது