தாஷ்கந்து

(தாஷ்கன்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாஷ்கந்து (Tashkent, உஸ்பெக் மொழி: Тошкент, தொஷ்கெண்ட்; ரஷ்ய மொழி: Ташкент, தாஷ்கெண்ட்) என்பது உஸ்பெகிஸ்தானின் தலைநகரமும் தாஷ்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். அதிகாரபூர்வமாக இதன் மொத்த மக்கள்தொகை 2 மில்லியன்கள் (2006 இல்) ஆகும்.

தாஷ்கந்து
Toshkent, Тошкент (உஸ்பெக்)
Ташкент (ரஷ்யம்)
நாடு உஸ்பெகிஸ்தான்
மாகாணம்தாஷ்கந்து மாகாணம்
தோற்றம்கிமு 5வது-3வது நூற்றாண்டுகளில்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்19,67,879
நேர வலயம்  (ஒசநே+5)
இணையதளம்http://www.tashvil.gov.uz/
தாஷ்கந்து நகரின் வான்கோழி பார்வை
தாஷ்கந்து நகரின் வான்கோழி பார்வை

மத்திய காலங்களில் இதன் பெயர் "சாக்" என அழைக்கப்பட்டது. பின்னர் சாஷ்கந்து (சாக் நகரம்) என அழைக்கப்பட்டது. (துருக்கிக் மொழியில் தாஷ் என்பது "கல்" எனப் பொருள்படும். கந்து என்பது நகரம் எனப்பொருள்படும்). 16ம் நூற்றாண்டின் பின்னர் சாஷ்கந்து என்ற பெயர் தாஷ்கந்து (கல் நகரம்) எனவும், பின்னர் ரஷ்ய ஆளுகையின் போது தாஷ்கெண்ட் எனவும் அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஷ்கந்து&oldid=3834006" இலிருந்து மீள்விக்கப்பட்டது