திக்ரோங் ஆறு
திக்ரோங் ஆறு (Dikrong River) என்பது இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறாகும். அருணாச்சல பிரதேச மலைகளில் உற்பத்தியாகி இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் வழியாகவும் (உம் நிர்ஜுலி) மற்றும் அசாம் பிகுபுரியா வழியாகப் பாய்ந்து சுபன்சிரி ஆற்றில் கலக்கின்றது.[1] [2]
திக்ரோங் ஆறு Dikrong River | |
---|---|
திக்ராங் ஆறு பாண்டெர்வா பகுதியில் | |
பெயர் | দিক্ৰং নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
State | அருணாசலப் பிரதேசம் & அசாம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | இமயமலை துணை மலைப்பகுதிகள், பபூம் பார் மாவட்டம் |
⁃ அமைவு | அருணாசலப் பிரதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 27°08′06.2″N 93°34′06.0″E / 27.135056°N 93.568333°E |
முகத்துவாரம் | சுபன்சிரி ஆறு |
⁃ அமைவு | மஜூலி அருகில், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°57′48.9″N 93°59′32.1″E / 26.963583°N 93.992250°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | திக்ரோங் ஆறு - சுபன்சிரி ஆறு - பிரம்மபுத்திரா |
வரலாறு
தொகுதிக்ரோங் ஆறு குறித்த விளக்கம் ஆரம்பக்கால மத புத்தகமான காளிகா புராணத்தில் காணப்படுகிறது. இதில் இந்த ஆறு திக்கர் பாசினி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
திக்ரோங்கின் துணை ஆறுகள்
தொகுமலைப்பகுதியில் இடது கரை ஆறுகள் :
- கீட் நாடி[1]
- பாங் நாடி (நாடி என்றால் அசாமிய மொழியில் நதி என்று பொருள்)[1]
- ஷு பபுங்[1]
- பெட்டி நல்லா[1]
மலைப்பகுதியில் வலது கரை ஆறுகள் :
சமவெளிப் பகுதிகளில் இடது கரை ஆறுகள் :
- பெகுலி நாடி[1]
சமவெளிப் பகுதிகளில் வலது கரை ஆறுகள் :
- கச்சிகாதா நாடி[1]