திக்வா கோயில்

திக்வா கோயில்கள் (Tigawa), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கட்னி மாவட்டத்தில் உள்ள பகோரிபந்து நகரத்திற்கு அருகில் உள்ள திக்வான் கிராமத்தில் அமைந்துள்ள 36 கோயில்களின் தொகுதி ஆகும்.[1] இவற்றில் ஒன்று தவிர மற்றவைகள் இசுலாமிய படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. கிபி 400-425 காலகட்டத்தில் குப்தர்களால் கட்டப்பட்ட கோயில்கள் விஷ்ணு, சாமுண்டி மற்றும் பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[2]

திக்வா கோயில்
5ஆம் நூற்றாண்டு கங்காளி தேவி கோயில்
5ஆம் நூற்றாண்டு கங்காளி தேவி கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திக்வான், பகோரிபந்த்
புவியியல் ஆள்கூறுகள்23°41′24.4″N 80°03′58.9″E / 23.690111°N 80.066361°E / 23.690111; 80.066361
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்கட்னி
திக்வா சிற்பங்கள்

அமைவிடம்

தொகு

இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின் கட்னி நகரத்திற்கும், ஜபல்பூர் நகரததிற்கு இடையே உள்ள பகோரிபந்த் சிற்றூருக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்வான் எனும் கிராமத்தில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Cunningham, Alexander (1879). Report of a Tour in the Central Province in 1873-74-75-76 (Vol IX). Archaeological Survey of India. New Delhi, pp. 41-47;   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Francis D. K. Ching; Mark M. Jarzombek; Vikramaditya Prakash (2010). A Global History of Architecture. John Wiley & Sons. pp. 227–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-00739-6.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்வா_கோயில்&oldid=3703987" இலிருந்து மீள்விக்கப்பட்டது