திசையன்களின் பெருக்கல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணிதத்தில் திசையன்களின் பெருக்கல் (multiplication of vectors) என்பது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட திசையன்களை அவற்றுக்குள்ளாகப் பெருக்குவதில் உள்ள பல வெவ்வேறு முறைகளைக் குறிக்கும். திசையன்களின் பெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:
- புள்ளிப் பெருக்கல் - இரு திசையன்களுக்கு இடையே நடைபெறும் ஒரு செயல்; இதன் விளைவு ஒரு திசையிலியாகும்.
- குறுக்குப் பெருக்கல் -இரு திசையன்களுக்கு இடையே நடைபெறும் ஒரு செயல்; இதன் விளைவு ஒரு திசையனாகும்.
- திசையிலி முப்பெருக்கம் -மூன்று திசையன்களின் பெருக்கல். இதன் விளைவு ஒரு திசையிலியாகும்.
- திசையன் முப்பெருக்கம் -மூன்று திசையன்களின் பெருக்கல். இதன் விளைவு ஒரு திசையனாகும்.
- திசையிலி நாற்பெருக்கம் -நான்கு திசையன்களின் பெருக்கல். இதன் விளைவு ஒரு திசையிலியாகும்.
- திசையன் நாற்பெருக்கம் -நான்கு திசையன்களின் பெருக்கல். இதன் விளைவு ஒரு திசையனாகும்.