திதி (திரைப்படம்)
திதி ( இறுதிச் சடங்கு ) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட நாடகத் திரைப்படமாகும். இதை ராம ரெட்டி இணைந்து எழுதி இயக்கியுள்ளார். [1] கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழில்முறை அல்லாத நடிகர்களைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. மூன்று தலைமுறை ஆண்கள் தங்கள் மரபின் 101 வயது மூத்தவரின் மரணத்தின்போது நடந்து கொள்ளுவது குறித்த கதை இது. இது ஓர் இந்திய-அமெரிக்க இணை தயாரிப்பு படம் ஆகும். இதை பிராஸ்ப்டிவிஸ் புரொடகசன்சிலிருந்து பிரதாப் ரெட்டி மற்றும் மேக்ஸ்மீடியாவிலிருந்து சன்மின் பார்க் இணைந்து தயாரித்தனர்.
திதி | |
---|---|
இயக்கம் | இராம ரெட்டி |
தயாரிப்பு | பிரதாப் ரெட்டி சுன்மின் பார்க் |
திரைக்கதை | எர்ரேகௌடா இராம ரெட்டி |
நடிப்பு | தம்மேகௌடா எஸ். சன்னகௌடா அபிசேக் எச். என். பூஜா எஸ்.எம். |
ஒளிப்பதிவு | டோரன் டெம்பெர்ட் |
படத்தொகுப்பு | ஜான் ஜிம்மர்மேன் இராம ரெட்டி |
கலையகம் | Prspctvs Productions Maxmedia |
வெளியீடு | 10 ஆகத்து 2015(Locarno Film Festival) 6 மே 2016 (India) 9 மார்ச்சு 2017 (Netflix) |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
திதி 2015 ஆகத்து 8 அன்று 68 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு அது தங்கச் சிறுத்தை விருதை வென்றது. இதன் விளைவாக, இது உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது. இது 2016 மே 6 அன்று கர்நாடகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் 2016 அன்று பொதுவாக நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.
கதைச் சுருக்கம்
தொகுதிதி ஒரு வியத்தகு நகைச்சுவைப் படம். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை ஆண்கள் தங்கள் குலத்தில் மூத்தவரான 101 வயது செஞ்சுரி கவுடா என்ற மனிதனின் மரணத்திற்கு எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றிய ஒரு வியத்தகு நகைச்சுவை படமாகும். கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் நொடேகொப்பலு என்ற கிராமத்தில் நடப்பதாக கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.
101 வயது செஞ்சுரு கௌடா இறந்துவிடுகிறார். முதிய வயதில் சுதந்திரமாக திரியவிரும்பும் அவரது மகன் கடப்பா, பரம்பரை சொத்தை விற்று தன் குடும்பத்தின் வறுமையை போக்க விரும்பும் கடப்பாவின் மகன் தம்மண்ணா, பொறுப்பின்றி ஊர் சுற்றும் தம்மண்ணாவின் மகன் அபி அகியோர் இந்த மரணத்திற்கும் 11 நாள் காரியத்துக்கும் இடையில் செய்த செயல்களும் அவற்றின் விளைவுகளுமே கதையாகும்.
நடிப்பு
தொகு- சன்னேகவுடா கடேப்பாவாகவாக
- தம்மகவுடா தம்மண்ணாவாக
- அபிஷேக் எச். என். அபியாக
- பூஜா எஸ்.எம் காவேரியாக
- சிங்கிகவுடா செஞ்சுரி கவுடாவாக
வளர்ச்சி மற்றும் தயாரிப்பு
தொகுகர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் அந்த உள்ள நெடகொப்பலு என்ற கிராமம்தான் கதைக்கான விதையை ஊன்றியது. அந்த கிராமத்துக்கு சென்றதால் தான் இந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்ற உந்துதலைப் பெற்றார் இயக்குநர் ராம ரெட்டி. இந்த ஊரானது படத்தின் கதையை இணைந்து எழுதியவரான எரிகவுடாவின் சொந்த ஊர் ஆகும். தனக்குள்ளேயே ஓர் உயர்ந்த சினிமா ஆர்வம் உள்ளதை உணர்ந்தார் ரெட்டி. பின்னர் ரெட்டி பிராக் திரைப்படக் கல்லூரியில் ஓர் ஆண்டுகாலம் செலவிட்டார். திரும்பியவுடன், அவர் அடிக்கடி அந்த ஊருக்குச் சென்று மூன்று மாதங்கள் கிராம வாழ்க்கையையும் மக்களையும் பயின்று ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இந்த செயல்பாட்டின் போது, எரிகவுடாவும் ரெட்டியும் சந்தித்து மூன்று கதாநாயகர்களைச் சுற்றியதாக திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தனர். சன்னேகவுடா (கடப்பா), தம்மேகவுடா எஸ். (தம்மன்னா), அபிஷேக் எச்.என். (அபி) என்ற இந்த மூன்று நபர்களின் நிஜ வாழ்க்கை ஆளுமைகளை மனதில் வைத்து, ரெட்டி மற்றும் எரிகவுடா ஆகியோர் ஒரு 101 வயது முதியவரான செஞ்சுரி கவுடாவின் மரணமும் மரணத்திற்குப் பின் 11ஆம் நாள் காரியம் எனப்படும் திதி நாள் வரையிலான நிகழ்வுகளைக் கொண்டு ஒரு திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினர். ரெட்டியும் எரிகவுடாவும் இதை எழுதி முடித்த பிறகு, அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்ட 160 பக்க திரைக்கதையைக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் முன் தயாரிப்பு பணிகளுக்குச் சென்றனர். இதில் சிறிய பாத்திரங்களுக்குத் தேவைப்படும் நடிகர்களைக் கண்டுபிடிப்பதற்காக எட்டு மாத காலம் செலவிட்டு படக்குழுவினரை உருவாக்கினர்.
படத்தின் தயாரிப்பு 2014 சனவரியில் நொடேகொப்பலு கிராமத்தில் தொடங்கியது. இந்த திரைப்படம் ஐந்து மாத காலப்பகுதியில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டது. தொழில்முறை அல்லாத நடிகர்களுடன் பணிபுரியும் சவால்கள் காரணமாக படப்பிடிப்பு நீண்ட காலம் நீடித்தது. படம் இறுதியில் 2015 டிசம்பரில் நிறைவடைந்தது.
வரவேற்பு
தொகுProfessional ratings | |
---|---|
Review scores | |
Source | Rating |
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா | [2] |
தி டெக்கன் குரோனிக்கள் | [3] |
ஐ.ஏ.என்.எஸ் | [4] |
ஹிந்துஸ்தான் டைம்ஸ் | [5] |
ஸ்லாண்ட் மேகசின் | [6] |
ரெடிப்.காம் | [7] |
எம்.யு.பி.ஐ | [8] |
விஜய கர்நாடகா | [9] |
பெங்களூர் மிரர் | [10] |
இந்தியன் எக்சுபிரசு | [11] |
ஒரு கிராமத்தின் நான்கு தலைமுறை ஆண்களைக் கொண்டு ஒரு கிராமத்தின் வாழ்க்கையை அசலாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தப் படம் உண்மைக்கு மிக நெருக்கமான படைப்பாக இருப்பதாகவும் பாராட்டப்பட்டது. எந்த இடத்திலும் ஆவணப் படத்தின் சாயல் வந்துவிடாமல் அம்மக்களின் வாழ்கையை பதிவு செய்துள்ளார் என்று இயக்குநர் பாராட்டப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Thithi director Raam Reddy on awards and more". 26 February 2016. http://www.asianage.com/bollywood/thithi-director-raam-reddy-awards-and-more-294. பார்த்த நாள்: 30 March 2016.
- ↑ "Thithi Movie Review, Trailer, & Show timings at Times of India". The Times of India (Sunayana Suresh). 7 May 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/Thithi/movie-review/52163508.cms. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "Thithi movie review: Entertainment with 'real' fun". SHASHIPRASAD SM. 8 May 2016. http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/080516/thithi-movie-review-entertainment-with-real-fun.html. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "'Thithi': Ground-breaking, rule-bending masterpiece". IANS Live (Subhash K. Jha). http://www.ianslive.in/index.php?param=review/8/1/Thithi_Ground_breaking_rule_bending_masterpiece-328. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "Thithi review: A pithy and pungent satire on poverty". Subhash K Jha. 4 June 2016. http://www.hindustantimes.com/movie-reviews/thithi-review-a-pithy-and-pungent-satire-on-poverty/story-IwdDS7kVH71T5BLDy8CTIJ.html. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "Thithi | Film Review | Slant Magazine". Slant Magazine (Clayton Dillard). 9 March 2016. http://www.slantmagazine.com/film/review/thithi. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "Thithi: What a win!". Rediff (Sreehari Nair). 4 June 2016. http://www.rediff.com/movies/report/thithi-what-a-win/20160604.htm. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "Thithi". Adrian Curry, Daniel Kasman. https://mubi.com/films/thithi. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "ತಿಥಿ ವಿಮರ್ಶೆ: ಇದೊಂದು ಮಿಸ್ ಮಾಡಲೇಬಾರದ ಚಿತ್ರ-Movie Review" (in kn-IN). Shashidhar Chitradurga. 7 May 2016. http://vijaykarnataka.indiatimes.com/entertainment/review/thithi-kannada-movie-review/moviereview/52157844.cms. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "Movie Review: Thithi - Bangalore Mirror -". Bangalore Mirror (Shyam Prasad S). 5 May 2016. http://bangaloremirror.indiatimes.com/entertainment/reviews/Movie-Review-Thithi/articleshow/52135251.cms. பார்த்த நாள்: 15 October 2016.
- ↑ "'Thithi' Review: Filmmaking at its best". The New Indian Express (Sharadha Srinidhi). 3 June 2016. http://www.newindianexpress.com/entertainment/kannada/2016/jun/03/Thithi-Review-Filmmaking-at-its-best-936251.html. பார்த்த நாள்: 15 October 2016.