தினேந்திரநாத் தாகூர்

தினேந்திரநாத் தாகூர் (Dinendranath Tagore) (1882-1935), மேலும் தினு தாகூர் என்றழைக்கப்படும் இவர் ஓர் வங்காள இசைக்கலைஞரும் மற்றும் புகழ்பெற்ற பாடகரும், இரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரரின் பேரனுமாவார். இவர் இரவீந்திரநாத் விரும்பக்கூடிய பல மெட்டுகளை உடனுக்குடன் இசையமைத்தார். விஸ்வபாரதிதியின் இசைப் பள்ளியின் முதல்வராகவும் மற்றும் நடன, நாடகம் மற்றும் இசை நிறுவனமான சங்கீத பவானை என்ற இசைப் பள்ளியின் தொடக்க ஆண்டுகளில் பணிபுரிந்தார். [1] தாகூரின் பாடல்களை ரவீந்திர சங்கீதம் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய முதல் நபர் இவர்தான்.

தினேந்திரநாத் தாகூர்
பிறப்பு1882
இறப்பு1935
தேசியம்இந்தியன்

தினேந்திரநாத் திவிஜேந்திரநாத் தாகூரின் மூத்த மகன் திவேபேந்திரநாத்தின் மகன் ஆவார். மேலும் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த ஜோரசங்கோ தாகூர் மாளிகையின் கலாச்சார ரீதியாக வளமான சூழலில் பிறந்தார். இவர் குறிப்பாக இந்துஸ்தானி இசையில் நன்கு பயிற்சி பெற்றவராவார்., மேலும் பல ஆரம்பகால ரவீந்திர சங்கீதம் இவரது குரலில் காப்பகங்களிலும் பதிவுகளிலும் காணப்படுகின்றன. மெல்லிசைகளைப் பதிவு செய்வதற்காக, இவர் முதன்மையாக பண்டிட் விஷ்ணு நாராயண் பத்கண்டேவால் புதிதாக முறைப்படுத்தப்பட்ட சர்காம் குறியீட்டைப் பயன்படுத்தினார். ஆனால் இவர் மேற்கத்திய இசைக் குறியீட்டையும் நன்கு அறிந்தவர்.

தாகூரின் பல நடன நாடகங்களுடனும் இவரது தொடர்பு இருந்தது. இதில் 1933இல் மும்பையில் தேசர் தேஷ் (அட்டைகளின் நிலம்) என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார். 1932இல் நாதிர் பூஜா என்றத் திரைப்படத்திற்கும் இசையமைத்தார்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேந்திரநாத்_தாகூர்&oldid=2991832" இருந்து மீள்விக்கப்பட்டது