தினேஷ் குப்தா

இந்திய புரட்சியாளர்

தினேஷ் சந்திர குப்தா (Dinesh Chandra Gupta) ( வங்காள மொழி: দিনেশ চন্দ্র গুপ্ত ) அல்லது தினேஷ் குப்தா, திசம்பர் 6 1911 - 7 ஜூலை 1931) இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான தீவிரமாக இருந்த ஓர் இந்தியப் புரட்சியாளர் ஆவார். இவர் பாதல் குப்தா, பினாய் பாசு ஆகியோருடன் சேர்ந்து கொல்கத்தாவின் தலைமைச் செயலக கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதற்காக குறிப்பிடப்படுகிறார்.

தினேஷ் சந்திர குப்தா
பிறப்பு(1911-12-06)6 திசம்பர் 1911
ஜோசுலாங், விக்ரம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்திய
(தற்போது வங்காளதேசம்)
இறப்பு7 சூலை 1931(1931-07-07) (அகவை 19)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது இந்தியா)
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலடப்பட்டார்
படித்த கல்வி நிறுவனங்கள்டாக்கா கல்லூரி
அறியப்படுவதுஎழுத்தாளர்களின் கட்டிடத் தாக்குதல்

குடும்பம்

தொகு

புகழ்பெற்ற இரவீந்திரசங்கீதத்தின் விரிவுரையாளரும் பயிற்சியாளருமான மாயா சென் (முதல் பெயர் குப்தா) இவரது சொந்த மருமகள் ஆவார். இவர் தனது மைத்துனர் அசலதா குப்தாவை மாயாவை இரவீந்திரசங்கீதம் கற்க அனுமதிக்குமாறு பரிந்துரைத்தார். இவரது மருமகனும், மாயாவின் சகோதரருமான தபன் குப்தா ஒரு பிரபல மருத்துவராக இருந்தார். மேலும், இலண்டனில் தாகூர் இயக்கத்தை நிறுவினார். குப்தாவின் மகள் தனிகா குப்தா, நன்கு அறியப்பட்ட நாடக ஆசிரியரும், பிபிசியிலும் இங்கிலாந்து மேடையில் தொடர்ந்து பணியாற்றுகிறார்.

ஆரம்ப நடவடிக்கைகள்

தொகு

தினேஷ் குப்தா, 6 டிசம்பர் 1911 அன்று இப்போது வங்காளதேசத்தில் முன்சிகஞ்ச் மாவட்டத்திலுள்ள ஜோசோலாங்கில் பிறந்தார்.[1] டாக்கா கல்லூரியில் படிக்கும் போது இந்திய தேசிய காங்கிரசின், கொல்கத்தா அமர்வின் போது 1928இல் சுபாஷ் சந்திர போஸால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குழுவான வங்காளத் தொண்டர் படையில் சேர்ந்தார். விரைவில் அதை மிகவும் சுறுசுறுப்பான புரட்சிகர சங்கமாக மாற்றி, பிரபலமற்ற பிரித்தன் காவல் அதிகாரிகளைக் கொல்லத் திட்டமிட்டனர். சிறிது காலம், இவர் மிட்னாபூரில் உள்ளூர் புரட்சியாளர்களுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்தார். இவரால் பயிற்சி பெற்ற புரட்சியாளர்கள் அடுத்தடுத்து மூன்று மாவட்ட நீதிபதிகளான, தக்ளஸ், பர்கே, பெடி ஆகியோரின் படுகொலைக்கு காரணமாக இருந்தனர்.

கடைசித் தாக்குதல்

தொகு

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொடூரமாக ஒடுக்குவதில் பிரபலமாக இருந்த சிறைத்துறை காவல்துறை இயக்குநர் கர்னல் என். எஸ். சிம்ப்சனை தொண்டர் படை குறிவைத்தது. புரட்சியாளர்கள் அவரை கொலை செய்ய மட்டுமே நினைத்தனர். ஆனால் செயலகக் கட்டிடம் மீது ஒரு தாக்குதலைத் துவங்குவதன் மூலம் பிரித்தன் அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு பயத்தை ஏற்படுத்த நினைத்தனர்.

8 டிசம்பர் 1930 இல், இவர், பினாய் பாசு, பாதல் குப்தா ஆகியோருடன் ஐரோப்பிய உடையில், எழுத்தாளர் கட்டிடத்திற்குள் நுழைந்து சிம்ப்சனை சுட்டுக் கொன்றனர். அருகில் இருந்த காவல்துறையினர் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

விரைவில் காவலர்கள் இவர்களை சுற்றி வளைத்தனர். எனினும், மூவரையும் கைது செய்ய விரும்பவில்லை. பாதல் குப்தா பொட்டாசியம் சயனைடு அருந்தினார். அதே நேரத்தில் பினாயும் இவரும் தங்கள் சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பெனாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 13 டிசம்பர் 1930 அன்று இறந்தார். தினேஷ் உயிருக்கு ஆபத்தான காயத்திலிருந்து தப்பினார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆலிப்புரா சிறையில் இருந்தபோது, இவர் தனது சகோதரிக்கு கடிதங்கள் எழுதினார். பின்னர் அவை 'அமி சுபாஷ் போல்ச்சி' புத்தகத்தில் தொகுக்கப்பட்டன. இவர் 7 ஜூலை 1931 அன்று அலிப்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு, கனிலால் பட்டாச்சார்ஜி 27 ஜூலை 1931 இல் திரு.காலிக் (தினேஷ் குப்தா வழக்கின் நீதிபதி) என்பவரை கொன்று இவரை தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கினார்.[2]

எழுத்துக்கள்

தொகு

தினேஷ் குப்தா பிரபாசி இதழில் வெளியிடப்பட்ட ஆன்டன் செக்கோவின் சிறுகதையை மொழிபெயர்த்தார். இவர் அலிப்பூர் மத்திய சிறையிலிருந்து 92 கடிதங்களையும் எழுதினார். இதில் தனது அண்ணி அசலதா குப்தாவிற்கு எழுதிய ஒரு சிலவும் அடங்கும்.[3]

 
பினாய், பாதல், தினேஷ் ஆகியோரின் தியாகத்தின் நினைவாக எழுத்தாளர் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு செதுக்கல்

நூலியல்

தொகு
  • Hemendranath Dasgupta, Bharater Biplab Kahini, II & III, Calcutta, 1948;
  • Ramesh Chandra Majumdar, History of the Freedom Movement in India, III, Calcutta 1963;
  • Ganganarayan Chandra, Abismaraniya, Calcutta, 1966.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mohanta, Sambaru Chandra (2012). "Gupta, Dinesh Chandra". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Prithwish C. Gupta (2016). Shahid Dinesh (Bengali). Kolkata: Shrayan. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-926712-6-0.Prithwish C. Gupta (2016). Shahid Dinesh (Bengali). Kolkata: Shrayan. p. 81. ISBN 978-81-926712-6-0.
  3. AMIT ROY (15 June 2008). "Hanged Bengali icon's great-niece bags MBE". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_குப்தா&oldid=3268428" இலிருந்து மீள்விக்கப்பட்டது