பினாய் பாசு
பினாய் கிருஷ்ண பாசு (Benoy Krishna Basu) ( வங்காள மொழி: বিনয় কৃষ্ণ বসু ) அல்லது பினாய் பாசு அல்லது பினாய் போசு என்றும் அழைக்கப்படும் இவர் (11 செப்டம்பர் 1908 - 13 டிசம்பர் 1930) இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான தீவிரமாக இருந்த ஓர் இந்திய புரட்சியாளர் ஆவார். தினேஷ் குப்தா, பாதல் குப்தா ஆகியோருடன் சேர்ந்து இவர் கொல்கத்தாவின் செயலகக் கட்டடத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.[1]
பினாய் கிருஷ்ண பாசு | |
---|---|
বিনয় কৃষ্ণ বসু | |
தாய்மொழியில் பெயர் | বিনয় কৃষ্ণ বসু |
பிறப்பு | ரோகித்பாக், விக்ரம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது வங்காளதேசம்) | 11 செப்டம்பர் 1908
இறப்பு | 13 திசம்பர் 1930 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது இந்தியா) | (அகவை 22)
மற்ற பெயர்கள் | பினாய் போசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | மிட்போர்ட் பள்ளி (தற்போது சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி) |
அறியப்படுவது | எழுத்தாளர்களின் கட்டிடத் தாக்குதல் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபாசு, வங்கதேசத்தில் முன்சிகஞ்ச் மாவட்டத்திலுள்ள ரோகித்பாக் கிராமத்தில் 1908 செப்டம்பர் 11 அன்று பிறந்தார். இவரது தந்தை, ரேபதிமோகன் பாசு ஒரு பொறியாளராவார்.
டாக்காவில் தனது மெட்ரிகுலேச்னில் தேர்ச்சி பெற்ற பிறகு, இவர் மிட்போர்ட் மருத்துவப் பள்ளியில் (இப்போது சர் சலீமுல்லா மருத்துவக் கல்லூரி ) சேர்ந்தார். டாக்காவின் புரட்சியாளரான ஹேமச்சந்திர கோசின் செல்வாக்கின் கீழ் யுகாந்தர் கட்சியுடன் நெருக்கமாக இணைந்திருந்த ஒரு இரகசிய சமுதாயமான 'முக்தி சங்கத்தில்' சேர்ந்தார். புரட்சிகர நடவடிக்கைகளோடு இவருக்கு தொடர்பு இருந்ததால் இவரால் மருத்துவப் படிப்பை முடிக்க முடியவில்லை.
புரட்சிகர நடவடிக்கைகள்
தொகுஇவரும், இவரது சக புரட்சியாளர்களும் 1928 இல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா மாநாட்டின் போது சுபாஷ் சந்திர போஸால் ஏற்பாடு செய்யப்பட்ட வங்காள தொண்டர் படையில் சேர்ந்தனர். பின்னர், இவர், டாக்காவில் அந்த அமைப்பின் உள்ளூர் பிரிவைத் தொடங்கினார். பின்னர், வங்காளத் தொண்டர் படை மிகவும் சுறுசுறுப்பான புரட்சிகர சங்கமாக மாறி, வங்காளத்தில் காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக, குறிப்பாக பல்வேறு சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமானமற்ற வகையில் நடத்துவதற்கு எதிராக "சுதந்திர நடவடிக்கை" என்ற திட்டத்தை தயாரித்தனர்.[2]
புரட்சிக் குழு மூத்த காவல்துறை அதிகாரி லோமானைக் கொல்லத் திட்டமிட்டது. அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் 29 ஆகஸ்ட் 1930 அன்று, பாதுகாப்பை மீறி சுட்டார். லோமேன் உடனடியாக இறந்தார்.
கடைசித் தாக்குதல்
தொகுசிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொடூரமாக ஒடுக்குவதில் பிரபலமாக இருந்த சிறைத்துறை காவல்துறை இயக்குநர் கர்னல் என்.எஸ். சிம்ப்சனை தொண்டர் படை குறிவைத்தது. புரட்சியாளர்கள் அவரை கொலை செய்ய மட்டுமே நினைத்தனர். ஆனால் செயலகக் கட்டிடம் மீது ஒரு தாக்குதலைத் துவங்குவதன் மூலம் பிரித்தானிய அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு பயத்தை ஏற்படுத்த நினைத்தனர்.
8 டிசம்பர் 1930 இல், இவர், தினேஷ் குப்தா, பாதல் குப்தா ஆகியோருடன் ஐரோப்பிய உடையில், எழுத்தாளர் கட்டிடத்திற்குள் நுழைந்து சிம்ப்சனை சுட்டுக் கொன்றனர். அருகில் இருந்த காவல்துறையினர் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
விரைவில் காவலர்கள் இவர்களை வளைத்தனர். எனினும், மூவரையும் கைது செய்ய விரும்பவில்லை. பாதல் குப்தா பொட்டாசியம் சயனைடு அருந்தினார். அதே நேரத்தில் தினேஷ் குப்தாவும் இவரும் தங்கள் சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். தினேஷ் உயிருக்கு ஆபத்தான காயத்திலிருந்து தப்பினார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 13 டிசம்பர் 1930 அன்று இறந்தார்.
முக்கியத்துவம்
தொகுபினாய், பாதல், தினேஷ் ஆகியோரின் தியாகம் குறிப்பாக வங்காளத்திலும் பொதுவாக இந்தியாவில் மேலும் புரட்சிகர நடவடிக்கைகளை ஊக்குவித்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, டல்கௌசி சதுக்கத்திற்கு பினாய்-பாதல்-தினேஷ் மூவரின் பெயரால் 'பிபிடி பாக்' என்று பெயரிடப்பட்டது. இவர்களின் தாக்குதலின் நினைவாக, எழுத்தாளர்கள் கட்டிடத்தின் முதல் தளத்தின் சுவரில் ஒரு தகடு பொறிக்கப்பட்டது.
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Benoy Basu". Indian Freedom Fighters. Archived from the original on 13 December 2014. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.
- ↑ Basu, Raj Sekhar (2012). "Basu, Benoy Krishna". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
நூலியல்
தொகு- Hemendranath Dasgupta, Bharater Biplab Kahini, II & III, Calcutta, 1948;
- Ramesh Chandra Majumdar, History of the Freedom Movement in India, III, Calcutta 1963;
- Ganganarayan Chandra, Abismaraniya, Calcutta, 1966.