பினோய்-பாதல்-தினேஷ் பாக்
பினோய்-பாதல்-தினேஷ் பாக் (Binoy-Badal-Dinesh Bagh,) இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் மைய வணிகப் பகுதிகளில் ஒன்றாகும். இது கொல்கத்தாவின் முக்கியமான நிர்வாக, வணிக மற்றும் வருவாய்சார் பகுதியாகவுமுள்ளது. சுருக்கமாக "பி. பி. டி. பாக்" என அழைக்கப்படும் இப்பகுதி முன்னர் "குளச் சதுக்கம்" (Tank Square) என்றும் அதன் பின்னர் "டல்ஹவுசி சதுக்கம்" எனவும் அழைக்கப்பட்டு வந்தது.[1] மேற்கு வங்காள அரசின் முக்கியக் கட்டிடங்களும் அலுவலகங்களும் இங்குள்ளன. எழுத்தர்களின் கட்டிடம், மேற்கு வங்கத் தலைமைச் செயலகம், ஆளுநர் வசிப்பிடம், சட்டப்பேரவைக் கட்டிடம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவை இங்கமைந்துள்ளன.
பினோய்-பாதல்-தினேஷ் பாக் (பி. பி. டி. பாக்) | |
---|---|
கொல்கத்தா அண்மைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 22°34′19″N 88°20′56″E / 22.572°N 88.349°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நகரம் | கொல்கத்தா |
மாவட்டம் | கொல்கத்தா |
மெட்ரோ நிலையம் | மகாகரன் மெட்ரோ நிலையம் |
கொல்கத்தா சுற்று ரயில்வே | பி. பி. டி. தொடருந்து நிலையம் |
மாநகராட்சி | கொல்கத்தா மாநகராட்சி |
வார்டு | வார்டு எண். 45, |
ஏற்றம் | 36 ft (11 m) |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலகக் குறியீட்டெண் | 700001, 700062 |
இடக் குறியீடு | +91 33 |
மக்களவைத் தொகுதி | கொல்கத்தா வடக்கு |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | சௌரங்கி |
பெயர் காரணம்
தொகுஇப்பகுதி பினாய் பாசு, பாதல் குப்தா, தினேஷ் குப்தா ஆகிய மூன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.[2] இம்மூவரும் திசம்பர் 8, 1930 இல் அப்போதைய சிறைத்துறை தலைமை ஆய்வாளரான என். எஸ். சிம்ப்சனை டல்ஹவுசி சதுக்கத்திலிருந்த எழுத்தர்களின் கட்டிடத்தின் மேல்மாடத்தில் வைத்துக் கொலைசெய்தனர். 1847 முதல் 1856 வரை இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த டல்ஹவுசியின் பெயரால் இச்சதுக்கம் அழைக்கப்பட்டது. சில காலங்களில் இது 'தி கிரீன் பிஃபோர் தி போர்ட்", 'டேங்க் சதுக்கம்' எனவும் பெயர் கொண்டிருந்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1833 building that escaped demolition is now a goldmine of art". thehindu.com. 14 December 2020. https://www.thehindu.com/news/cities/kolkata/1833-building-that-escaped-demolition-is-now-a-goldmine-of-art/article33329891.ece.
- ↑ "Benoy Badal Dinesh: The Story of Three Brave Boys Who Took The Battle to the British!". thebetterindia.com. 4 August 2018. https://www.thebetterindia.com/154654/benoy-badal-dinesh-writers-building-kolkata-news/.
- ↑ Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, p 268-9, General Printers and Publishers Pvt. Ltd.
வெளியிணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Esplanade