தின்மன் ஹர்துல் சிங்
தின்மன் ஹர்துல் சிங் அல்லது லாலா ஹர்தூல் என்பது இந்தியாவில் உள்ள பண்டேல்கண்ட் இனத்தவரின் இந்து நாட்டுப்புற தெய்வம் ஆகும். அவர் ஓர்ச்சாவின் இளவரசர் மற்றும் மகாராஜா வீர் சிங் தியோவின் மகன் மற்றும் ஜுஜார் சிங்கின் சகோதரர் ஆவார். அவர் 1664 இல் பிறந்தார் மற்றும் 1688 இல் தனது 24 வயதில் இறந்தார். பண்டேல்கண்டில் உள்ள ஹர்துல் கோயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான மையமாக விளங்குகிறது, மேலும் உள்ளூர் நம்பிக்கைகளின்படி அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்றாலும் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
அவர் சில கருதுகோள்களின் படி மஹோபாவின் அல்ஹா மற்றும் உடலின் மருமகனாகக் கருதப்படுகிறார் (பார்க்க அல்ஹாகண்ட் ), இருப்பினும் அல்ஹா மற்றும் ஊடல் ஆகியோர் சண்டேலா ஆட்சியின் போது பனாபர்களாக இருந்தனர், அங்கு லாலா ஹர்துல் ஒரு பண்டேலாவாக இருந்தார். எனவே வரலாற்றின்படி அவ்வாறு இருக்க வாய்ப்புகளில்லை.
நாட்டுப்புறவியல்
தொகுஇளவரசர் ஹர்தூலின் மூத்த சகோதரர் ஜுஜார் சிங், மற்றும் ஹர்தூலின் மனைவிக்கும் இடையிலான திருமணத்திற்கு புறம்பான உறவை பற்றி அறிந்து அதை எச்சரித்ததால், ஹர்தூலுக்கு விஷத்தை கொடுத்து சாகடிக்க அவரது மனைவிக்கு உத்தரவிட்டதாகவும், பின்னர் அவர்களது சகோதரி ஜுஜாரிடம் தனது மகளின் திருமணத்திற்கு உதவுமாறு கேட்டபோது, இறந்து போன உன் சகோதரனான ஹர்தூலிடம் போய் உதவி கேட்டு திருமணத்தை நடத்தி கொடுக்க சொல்லி கேலி செய்ததாகவும், ஆனால் உண்மையாகவே திருமணத்தன்று ஹர்தூல் நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதித்ததாகவும் உள்ளூர் புராணக்கதை கூறுகிறது. [1]
அந்த கதையின் படியே ஹர்துல் அவர் அழைக்கப்பட்ட எந்தவொரு திருமணங்களில் கலந்துகொள்வார் என்றும், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக மக்கள் அவருடைய பெயருக்கும் ஒரு திருமண அட்டையை விட்டுச் செல்வதாகவும் உள்ளூர் மக்களால் இன்னும் நம்பப்படுகிறது. [2] [1]
மற்ற கலை வடிவங்களில்
தொகுலாலா ஹர்துலின் புராணக்கதை உள்நாட்டில் எங்கும் பிரபலமானது மேலும் புந்தேல்கண்டில் தெரு நாடகமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.
சுந்தரி ஒதாசி மஹ்ரோ பிர் (லாலா ஹர்தூல்) என்றும் 2012 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய வரலாற்று நாடகத் திரைப்படமாகும், இது இவரின் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே இயக்கப்பட்டது, இது நிஷாந்த் பரத்வாஜ் இயக்கியது மற்றும் கேர் சாங்க்ரி தயாரித்தது. [3] இதில் சச்சேந்திர சௌபே ஹர்தௌலாகவும், திவ்யங்கா திரிபாதி பத்மாவதியாகவும் (ஜூஜார் சிங்கின் ராணி மற்றும் மனைவி) மற்றும் தேவேந்திர பகத் ராஜா ஜுஜார் சிங்காகவும் நடித்துள்ளனர். [3]
மேலும் பார்க்கவும்
தொகு- ஜஹாங்கீர் மஹால்
- சதுர்புஜ் கோவில்
- ராமராஜா கோவில்
- பிரவின் ராய் மஹால்
- கேசவதாஸ்
- அனார்கலி
- ஜான்சி ராணி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sharma, Rita; Sharma, Vijai (2006). Forts of Bundelkhand. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129107213.
- ↑ Sharath, Lakshmi. "The dead prince who is still alive".
- ↑ 3.0 3.1 "Lala Hardaul". Cair Saangri. Jul 19, 2012. Archived from the original on 24 June 2021.