திபெத்திய வெண்ணெய்த் தேநீர்

திபெத்திய வெண்ணெய்த் தேநீர்; என்பது போ சா என்றும் போட் சா என்றும் சா சுமா என்றும் குர் குர் என்றும் திபெத்திய, சீன, லடாக் மொழிகளில் அழைக்கப்படும் திபெத்தியத் தேநீர் ஆகும் . இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் நேபாளம், பூட்டான்,திபெத்து, ஆகிய நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கும் சீன மக்களாலும், இந்தியாவில் குறிப்பாக லடாக், சிக்கிம்,அருணாசலப் பிரதேசம், ஆகியவிடங்களில் வசிக்கும் மக்களால் அருந்தப்படும் தேநீர் வகையாகும்.

திபெத்திய வெண்ணெய்த் தேநீர்
கிண்ணத்தில் வெண்ணெய்த் தேநீர்.
மாற்றுப் பெயர்கள்போ சா, சா சுமா, கூர்கூர் சா,சா சுஸ்கன்
வகைபானம்
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம், திபெத்து
பகுதிAsia
முக்கிய சேர்பொருட்கள்தேயிலை, வெண்னெய், உப்பு

பாரம்பரியமாக, இது தேயிலை இலைகள், யாக் வெண்ணெய், நீர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது, இருப்பினும் அதன் மிக அதிக அளவில் கிடைக்கும் தன்மை மற்றும் குறைந்த தயாரிப்புச் செலவின் காரணமாக பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது,

வழக்கம் தொகு

திபெத்தியத் துறவி தேநிரைக் கலக்குகிறார்.
திபெத்தின் தாஷில்ஹன்போ மடாலயத்தில் ஒரு துறவி தேநீரை ஊற்ருகிறார்..

வெண்ணெய்த் தேநீர் குடிப்பது திபெத்திய வாழ்க்கை முறையின் ஒரு வழக்கமான அங்கமாகும். வேலையில் ஈடுபடும் முன்னர் ஒரு திபெத்தியர் பொதுவாக இந்த வெண்ணெய்த் தேநீரை பல கிண்ணங்கள் வரை குடித்து மகிழ்வர், மேலும் இது விருந்தினர்களுக்கும் வழங்கப்படும் ஒரு முக்கியப் பானமாகும். இந்தத் தேநீரைத் தயாரிக்க வெண்ணெய் முக்கிய மூலப்பொருள் ஆகும். வெண்ணெய் தேநீர் ஏராளமான கலோரி ஆற்றலை வழங்குகிறது. மேலும் குறிப்பாக திபெத்தின் அதிக உயரத்திற்கு மிகவும் பொருத்தமான பானமாகும். பனியின் காரணமாக வெடித்துப் பிளவுபடும் உதடுகளுக்கு அதனைத் தடுக்க வெண்ணெய் உதவக்கூடும்.[1]

திபெத்திய வழக்கப்படி, வெண்ணெய் தேநீர் தனித்தனி மிடறுகளாகக் குடிக்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு மிடற்றுக்குப் பிறகும் விருந்து தருபவர் விருந்தாளியின் தேநீர்க்கிண்ணத்தின் விளிம்பினை தேநீரால் நிரப்புகிறார். இவ்வாறு, விருந்தினர் தனது கிண்ணத்தை ஒருபோதும் காலிசெய்ய விடுவதில்லை. மாறாக, அது தொடர்ந்து நிரப்பட்டே வருகிறது. விருந்தினர் தேநீரைக் குடிக்க விரும்பவில்லை என்றால், செய்ய வேண்டிய சிறந்த விஷயம் என்னவென்றால், வெளியேறும் நேரம் வரும் வரை தேநீரைத் தீண்டாமல் விட்டுவிட்டு, பின்னர் கிண்ணத்தை காலிசெய்ய வேண்டும். என்ற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது இதனால் விருந்தளிப்பவரின் மனம் புண்படுவதில்லை..[2]

இம்மக்கள் மாவுப்பொருளால் தயாரான சாம்பா அல்லது சம்பா எனப்படும் ஓர் உணவுடன் வெண்ணெய்த் தேநீரை நன்கு கலந்தோ அல்லது அதன்மீது ஊற்றியோ அல்லது அதனை தேநீரில் நனைத்தோ சாப்பிடுகின்றனர்..

நகரப் பகுதிகளில் பல நாட்கள் சேமித்து வைக்கப்படும் தேயிலை, தேநீர் தயாரிக்கப் பயன்படுகிறது. மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கப்படுவதால் இந்தத் தேயிலைகள் செறிவூட்டப்படுகின்றன. பின்னர் உப்பு மற்றும் வெண்ணெ சேர்த்துஒரு சிறப்பு தேநீர் கலனில் ஊற்றி வைக்கப்படுகிறது. மேலும் சூடாகப் பரிமாறுவதற்கு முன்பு தீவிரமாகச் கடையப்படுகிறது. தற்காலத்தில் மின்சார கலப்பான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

 
வெண்ணெய் தேநீர், செரா மடாலயம், திபெத்.

திபெத்தில் தேயிலை வரலாறு 7 ஆம் நூற்றாண்டில் டாங் வம்சத்தின் காலத்திற்கு முந்தையது. இருப்பினும், இது 13 ஆம் நூற்றாண்டு வரை, சக்யா வரிசைமுறை மற்றும் பக்மோடு மன்னர்களின் காலம் வரை அதன் கிட்டத்தட்ட உலகளாவிய நிலையை அடையவில்லை .

தயாரிப்பு தொகு

தேயிலை இலைகளை அரை நாள் தண்ணீரில் வேகவைத்து, அடர் பழுப்பு நிறத்தை அடைவதன் மூலம் மிக உயர்ந்த தரமான தேநீர் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அது ஆடை நீக்கப்பட்டு, ஒரு உருளையில் புதிய யாக் வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து ஊற்றப்படுகிறது. இதன் விளைவாக அடர்த்தியான கூழ் அல்லது அடர்த்தி நிறைந்த எண்ணைய் போன்றஒரு ஊதா நிற திரவமாக தேநீர் மாறுகிறது.[2] பின்னர் இது தேநீர் பானைகளில் அல்லது ஜாடிகளில் ஊற்றப்படுகிறது.

மற்றொரு முறையில் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, அதில் கைப்பிடி அளவு தேயிலைச் சேர்க்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட கருப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கப்படுகிறது. பின்னர் சிறிது சோடாவும் உப்பும் சேர்க்கப்படுகிறது. கொதிக்க வைக்கப்பட்ட தேநீர், பின்னர் ஒரு குதிரை-முடி அல்லது நாணல் வடிகட்டி மூலம் ஒரு மரத்தாலான கடைசல் கலனில் வடிகட்டப்படுகிறது, பின்னர் மிகப்பெரிய அளவில் வெண்ணெய் ஒரு பெரிய கட்டியாகச் சேர்க்கப்படுகிறது. தேநீர் சரியான நிலைத்தன்மையை அடையும் வரை, அவை சூடாக இருக்க சூட்டடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் செப்புப் பானைகளுக்கு மாற்றப்படும் வரை இது கடையப்படுகிறது.. கடைசல் மத்து கிடைக்காதபோது, அதற்குப் பதிலாக மர கிண்ணமும் விரைவாக கிளறப் போதுமானதாக இருக்கும்.[3]

இப்போதெல்லாம், தேயிலை இலைகள், யாக் வெண்ணெய் மற்றும் மர வெண்ணெய் சுருள்கள் கிடைக்காதபோது, மக்கள் பெரும்பாலும் தேநீர் பைகள், சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான வெண்ணெய் மற்றும் ஒரு கலப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெண்ணெய் தேநீர் தயாரிக்கிறார்கள்.[4][5]

மேலும் காண்க தொகு

  • மசாலா சாய்
  • மதியம் சாய்
  • வெண்ணெய் உணவுகளின் பட்டியல்
  • திபெத்திய உணவுகளின் பட்டியல்
  • Suutei tsai
  • திபெத்திய உணவு வகைகள்

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Mayhew, Bradley and Kohn, Michael. (2005) Tibet. 6th edition, p. 75.
  2. 2.0 2.1 Chapman, F. Spencer. (1940). Lhasa the Holy City, pp. 52-53. Readers Union Ltd., London.
  3. Tibetan Marches. André Migot. Translated from the French by Peter Fleming, pp. 102-3. (1955). E. P. Dutton & Co. Inc. New York.
  4. "Sherpa Butter Tea". Archived from the original on 2017-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
  5. "Yak Butter Tea". Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.

ஆதாரங்கள் தொகு

  • Forbes, Andrew; Henley, David (2011). 'Tibetan Butter Tea' in: China's Ancient Tea Horse Road. Chiang Mai: Cognoscenti Books. ASIN: B005DQV7Q2.
  • Richtsfeld, Bruno: Tee und Teekultur in Tibet. In: Markus Mergenthaler (ed.): TeeWege. Historie / Kultur / Genuss. Dettelbach 2013. p. 28-77.
  • Waddell, L. Austine. 1895. Tibetan Buddhism: With Its Mystic Cults, Symbolism and Mythology, and in Its Relation to Indian Buddhism. W. H. Allen & Co., London. Reprint 1972: Dover Publications, New York. ISBN 0-486-20130-9. For a good description of how tea was served in monasteries, see pp. 191–192; 214-217 (with illustration).
  • Tibetan Tea and Its Tradition

வெளி இணைப்புகள் தொகு