திப்ராலாந்து
திப்ராலாந்து (Tipraland), வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வாழும் பூர்வகுடிகள் கோரும் தனி மாநிலம் ஆகும்.[1] திரிபுரா பழங்குடியினருக்கான தன்னாட்சி மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து திப்ராலாந்து எனும் பெயரில்திப்ராலாந்து மாநிலக் கட்சி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியினர்[2]தனி மாநிலம் கோருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் திப்ராலாந்து பகுதி 68% பரப்பளவும், திரிபுரா மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி கொண்டது.[3]
தனி மாநிலக் கோரிக்கைக்கு காரணங்கள்
தொகு1947 இந்திய விடுதலை மற்றும் 1971 வங்காளதேச போரின் போது இலட்சக் கணக்கான இந்து சமயம் சார்ந்த வங்காள மொழி பேசும் மக்கள் தற்போதைய வங்காள தேசத்திலிருந்து திரிபுரா பகுதிக்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர்.[4] இதனால் இம்மாநிலத்தின் பூர்வகுடி மக்களை விட, புலம் பெயர்ந்த வங்காள மக்களின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதால், வங்காளிகள் திரிபுரா மாநிலத்தை ஆளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இம்மாநிலத்தின் பூர்வகுடி நிலப்பகுதிகளை, பூர்வகுடிகளான திரிபுரி பூர்வகுடி மக்களே ஆளும் வகையில் திப்ராலாந்து எனும் தனி மாநிலக் கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ல் திரிபுரா பழங்குடியினருக்கான தன்னாட்சி மாவட்டங்களில் மக்கள் தொகை 12,16,465. அதில் பூர்வகுடி பழங்குடியினர் 10,21,560 (83.4%) ஆகவுள்ளனர்.[6]
1947 இந்திய விடுதலையின் போது இலட்சக் கணக்கான இந்து சமயம் சார்ந்த வங்காள மொழி பேசும் மக்கள் கிழக்கு பாகிஸ்தான் எனும் தற்போதைய வங்காள தேசத்திலிருந்து திரிபுரா பகுதிக்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர்.
1971 வங்காளதேச போரின் போது இலட்சக் கணக்கான இந்து சமய வங்காள மக்கள் திரிபுராவில் புலம்பெயர்ந்தனர்.[7]
ஆண்டு | மொத்த மக்கள் தொகை | பூர்வகுடி அல்லாதவர்கள் | பூர்வகுடி பழங்குடியினர் | பூர்வகுடி மக்கள் % | பூர்வகுடி அல்லாதவர்கள் % |
---|---|---|---|---|---|
1931 | 382,450 | 179,123 | 203,327 | 53.16% | 46.84% |
1941 | 513,010 | 256,019 | 256,991 | 50.09% | 49.91% |
1951 | 639,029 | 401,071 | 237,958 | 37.23% | 62.77% |
1961 | 1,142,005 | 781,935 | 360,070 | 31.53% | 68.47% |
1971 | 1,556,342 | 1,105,796 | 450,544 | 28.95% | 71.05% |
மேற்கோள்கள்
தொகு- ↑ Chakravarty, Ipsita. "Tripura vs Twipra: An old identity politics may feed into new political rivalries". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
- ↑ "Indigenous People's Front Of Tripura (IPFT) | The North East Today | Delivering news up to the minute". thenortheasttoday.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-05-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.
- ↑ Anmoy Chakraborty (8 February 2021). "With a Call for 'Greater Tipraland', Tripura Royal Scion's Party to Fight District Polls". The Wire. https://www.thewire.in/article/politics/tripura-pradyot-debbarma-greater-tipraland/amp.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Over 11 lakh Bangla nationals entered NE during 1971-83 - Silchar" (in en-US). Silchar. 2017-03-19 இம் மூலத்தில் இருந்து 2017-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170818175914/http://silchar.com/over-11-lakh-bangla-nationals-entered-ne-during-1971-83/.
- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". Archived from the original on 3 June 2020. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ TTAADC Basic Statistics
- ↑ "Over 11 lakh Bangla nationals entered NE during 1971-83 - Silchar" (in en-US). Silchar. 2017-03-19 இம் மூலத்தில் இருந்து 2017-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170818175914/http://silchar.com/over-11-lakh-bangla-nationals-entered-ne-during-1971-83/.
- ↑ Ghoshal, Anindita (in en). Changing Mentality of the Bengali Refugees: The Story of Tripura (1946-1971). https://www.academia.edu/13051044.
வெளி இணைப்புகள்
தொகு- Tipraland: Demand for Separate State
- Tripura Teer பரணிடப்பட்டது 2022-04-28 at the வந்தவழி இயந்திரம்