தியாச ஆதியா

தியாசா ஆதியா (Tiasa Adhya)(பிறப்பு c. 1987 ) என்பவர் இந்திய உயிரிப் பாதுகாவலர் மற்றும் வனவிலங்கு உயிரியலாளர் ஆவார்.[1] இவர் மீன்பிடிப் பூனைகளைக் கண்காணித்து ஆய்வு செய்துள்ளார். ஆதியாவின் அறிவியல் சேவைக்காக நாரி சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

தொழில் தொகு

தியாசா ஆதியா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் துறைகளுக்கிடையேயான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்தார்.[1] ஆதியா பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தில் பணியாற்றுகிறார். சிற்றினங்கள் உயிர்வாழ்தல் ஆணையத்தின் ஒரு பகுதியாக, இவர் மேற்கு வங்காளத்தில் மீன்பிடிக்கும் பூனைகளைக் கண்காணிக்கிறார்.[2] இவர் மீன்பிடி பூனை திட்டத்தையும் இணைந்து நிறுவினார்.[3]

ஆதியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் நாரி சக்தி விருதினையும் 2022 எதிர்கால இயற்கைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.[1][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாச_ஆதியா&oldid=3665594" இலிருந்து மீள்விக்கப்பட்டது