திராகோ சுமாத்திரானசு

திராகோ சுமாத்திரானசு
ஆண் திராகோ சுமாத்திரானசு சிங்கப்பூரில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
தி. சுமாத்திரானசு
இருசொற் பெயரீடு
திராகோ சுமாத்திரானசு
செல்ஜெல், 1844
வேறு பெயர்கள்
  • திராகோ விரிடிசு வர். சுமாத்திரான செல்ஜெல், 1844
  • திராகோ வொலன்சு சுமாத்ரானசு
    — மசுடெரசு, 1983
  • திராகோ சுமாத்ரானசு
    — மெக் குயெர் & கியாங், 2001[1]

திராகோ சுமாத்திரானசு (Draco sumatranus) எனும் சுமாத்திரா மிதக்கும் பல்லியானது தென்கிழக்காசியாவில் காணப்படும் ஓந்தி சிற்றினமாகும். இது இதன் உடலின் பக்கங்களில் நீளமான விலா எலும்புகள் மற்றும் தோல் மடிப்புகளைக் கொண்டுள்ளது. இவை விரிவடைந்து காணப்படும் போது மரக்கிளைகளுக்கிடையே இப்பல்லிகளைச் சறுக்கிச் செல்ல உதவுகிறது.

நடத்தை

தொகு

தி. சுமாத்திரானசு முதன்மையாக மரத்தில் வாழும் வாழ்க்கையினைக் கொண்டுள்ளது. பெண் பல்லிகள் வனத்தின் தரைப் பகுதிக்கு முட்டையிட வருகின்றன.

விளக்கம்

தொகு

தி. சுமாத்திரானசு உடல் நீளம் சுமார் 9 செ.மீ. ஆகும். சற்று நீளமான வாலினைக் கொண்ட இந்த ஓந்தி மரத்தின் கிளைகளுடன் பொருந்தும் வகையில் மறைய கோடுகளுடன் அடர் சாம்பல்/பழுப்பு நிறத்துடன் கூடிய உடலைக் கொண்டுள்ளது. ஆண்களுக்குக் கன்னத்தின் கீழ் மஞ்சள் முக்கோணத் தோல் உள்ளது. இது பிற பல்லிகளுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுகிறது. பெரும்பாலும் இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்துகின்றன. ஆனால் பெண் பல்லி மிகவும் சிறிய நீல நிற மடிப்பைக் கொண்டுள்ளது.

உணவு

தொகு

தி. சுமாத்திரானசு சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. எறும்புகளும் கறையான்களும் இவற்றின் உணவில் பொதுவானவை.

வாழ்விடம்

தொகு

தி. சுமாத்திரானசு காடுகளிலும் பூங்காக்களிலும் தோட்டங்களிலும் நகர்ப்புற அமைப்புகளிலும் ஒப்பீட்டளவில் பொதுவானவை.

புவியியல் வரம்பு

தொகு

தி. சுமாத்திரானசு தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பலவான் தீவுகளில் வாழ்கின்றது.

வகைபிரித்தல்

தொகு

தி. சுமாத்திரானசு முன்பு திராகோ வாலன்சு சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. The Reptile Database. www.reptile-database.org.
  2. "Common Gliding Lizard - Draco volans".

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • புகைப்படங்கள் மற்றும் விளக்கம்
  • மெக்குயர் ஜே, ஹீங் கேபி. 2001. "தென்கிழக்கு ஆசிய பறக்கும் பல்லிகளின் பைலோஜெனெடிக் சிஸ்டமேட்டிக்ஸ் (இக்வானியாஃ அகாமிடேஃ டிராக்கோ) மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ வரிசை தரவுகளிலிருந்து ஊகிக்கப்படுகிறது". லின்னியன் சொசைட்டியின் உயிரியல் இதழ் 72:3
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராகோ_சுமாத்திரானசு&oldid=4175524" இலிருந்து மீள்விக்கப்பட்டது