திராவிட இயக்கத் தமிழர் பேரவை

திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்", என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்க தமிழர் பேரவை. [1]

இப்பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்.[2]

இப்பேரவை 22 சனவரி 2007ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் இப்பேரவை தொடங்கப்பட்டது.[1] இப்பேரவையின் மூலம் 'கருஞ்சட்டை தமிழர்' என்னும் மாத இதழ் வெளிவருகிறது. பின்பு இது மாதம் இருமுறையாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "அறிமுகம்". பார்த்த நாள் 13 சூன் 2018.
  2. "வீரபாண்டியன்". பார்த்த நாள் 14 சூன் 2018.