திரிபுரா மாநிலத்தின் இசை
திரிபுரா மாநிலத்தின் இசை என்பது இந்தியாவின் பல்வேறு வகையான நாட்டுப்புற இசையை உருவாக்கிய மாநிலமாகும். திரிபுரா இந்தியாவின் மூன்றாவது சிறிய மாநிலமாகும். இம்மாநிலத்தின் தலைநகரம் அகர்தலாவில் உள்ளது . திரிபுராவில் 19 வெவ்வேறு பழங்குடி சமூகங்கள் மற்றும் பெங்காலி மற்றும் மணிப்பூரி சமூகங்களுடன் கலந்து காணப்படுகிறது. ஒவ்வொரு பழங்குடி சமூகங்கள் பின்பற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையாக திரிபுராவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு காணப்படுகிறது. இதன் பங்களிப்பு காரணமாக இங்கு வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமாக உள்ளன. இங்குள்ள பழங்குடி மக்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான நடனம் மற்றும் இசையைக் கொண்டுள்ளனர், அவை முக்கியமாக நாட்டுப்புற இயல்போடு இணைந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் போன்ற முறைகளில் திருமணம், மதம் மற்றும் பிற பண்டிகைகள் போன்ற சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
ஹேமந்த ஜமாத்தியா என்ற இசைக்கலைஞர் 1979 ஆம் ஆண்டு தொடங்கி, பிரிவினைவாத திரிபுரா தேசிய தொண்டர்களின் இசைப் பிரதிநிதியாக ஆனபோது பெரும் புகழ் பெற்றார். பின்னர் அவர் சரணடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார், திரிபுரி மக்களின் நாட்டுப்புற இசைக்காக தன்னை அர்ப்பணித்தார். திரிபுரி மொழியில் நாட்டுப்புற மற்றும் நவீன இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியால் இசைத் துறையில் அவருக்கு மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது.
திரிபுரா நாட்டுப்புற இசை
தொகுதிரிபுராவின் பழங்குடியினரின் நடனமும் இசையும் முக்கியமாக நாட்டுப்புற இயல்புடையவை. நாட்டுப்புற பாடல்களுடன் சரிந்தா, சோங்பிரெங் மற்றும் சுமை போன்ற இசைக்கருவிகளும் உள்ளன. பல தொன்மங்கள் மற்றும் புராணக் கதைகள் திரிபுரா இசையுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் இவை அற்புதமான இசைக்கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள் அதன் இசையை இனிமையாக்குவதற்கு மரம் மற்றும் பீப்பாய் வடிவில் ஆட்டின் தோல் சவ்வுகள் இரண்டு முனைகளிலும் மூடப்பட்டிருக்கும் காம் போன்ற இசைக்கருவிகள்,மூங்கிலால் செய்யப்பட்ட சுமுய் (புல்லாங்குழல்) , சரிண்டா, சோங்பிரெங், டாங்டு மற்றும் சிலம்பங்கள் போன்ற பல்வேறு கைவினை இசைக்கருவிகளை திரிபுரியர்கள் பயன்படுத்துகின்றனர், [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sanajaoba, Naorem (1988). Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization (in ஆங்கிலம்). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-853-2.